நிறுவனம்:யாழ்/ நல்லூர் சென் பெனடிக்ற் வித்தியாசாலை
பெயர் | யாழ்/ நல்லூர் சென் பெனடிக்ற் வித்தியாசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | யாழ்ப்பாணம் |
ஊர் | நல்லூர் |
முகவரி | நல்லூர், யாழ்ப்பாணம் |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | |
வலைத்தளம் |
நல்லூர் சென் பெனடிக்ற் வித்தியாசாலை, 1905 ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது.
1905ம் ஆண்டு யாழ் மறைமாவட்ட ஆயர் வந்தனைக்குரிய யுலன் ஆண்டகையின் அனுசரனையுடன் கத்தோலிக்க சமய வளர்ச்சிக்காகச் சமயப்பாடசாலையாக சமய வளர்ச்சிக்கும் தமிழ் மொழி வளர்ச்சிக்கும் அரும்பணி புரிந்த அமரர் அருட் திரு. நல்லூர்சுவாமி ஞானப்பிரகாசியார் அடிகளால் ஆசீர்வாதப்பரின் பெயரில் ஸ்தாபிக்கப்பட்டது. இப்பாடசாலை ஆரம்பமான நாள் தொடக்கம் அரசாங்கம் பாடசாலைகளைப் பொறுப்பேற்ற நாள்வரை கத்தோலிக்க மிஷனின் பொறுப்பில் சிறப்புடன் இயங்கி வந்தது. 1903ம் ஆண்டு புனித ஆசீர்வாதப்பர் ஆலயம் உருவாக்கப்பட்ட பின் 1904ம் ஆண்டில் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் இப்பங்கைப் பொறுப்பேற்று இங்கு தங்கியிருந்தார். மறை பணியாளர்கள் விசுவாசிகளின் ஆன்மீகத் தேவைகளைமட்டும் நோக்காது சமூக மேம்பாட்டினையும் கருத்திற்கொண்டே பணியாற்றி வருகின்றனர் அதுவும் கல்விப்பணிக்கு அதிகமுக்கியத்துவம் கொடுத்து மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர். 1904ம், 1905ம் ஆண்டுகளில் புனித ஆசீர்வாதப்பர் ஆலயம் அமைந்திருந்த சுற்றாடலைச் சேர்ந்த மக்கள் பலவிதத்திலும் வாழ்க்கை வசதிகள் குறைந்த மக்களாகவே காணப்பட்டனர். எமது சமூக வறுமையால் வாடினும் அறிவுப்பசியால் மாணவ உலகுவாடிவதங்காது கல்வியைப் பருவத்தே பெற்றுப் பயனுடைய வேண்டுமென்ற காரணத்தால் பேரறிஞர் சுவாமி ஞானப்பிரகாசர் அவர்களால் 1905ம் ஆண்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் பிள்ளைகளுடன் ஆலயத்தின் விறாந்தையில் மறையாசியர் இறப்பியேற்பிள்ளை ஆசிரியராக இருந்தார். அவரை தொடர்ந்து திரு. யோசப் ஆசிரியராகவும் றோசம்மா என்பவர் உதவி ஆசிரியராகவும் கடமை புரிந்தனர் காலப்போக்கில் வளர்ச்சி அடைந்து மாணவர்கள் குறையறக் கல்வியறிவைப் பெற்றனர். இவ்வாறு தொண்மைசிறப்புகளையும் பல்வேறு வளர்ச்சி படிநிலைகளையும் கொண்ட இப்பாடசாலை தனது வரலாற்றில் மைல்கல்லான நூற்றாண்டுவிழாவினை 2005ம் ஆண்டில் வெகுசிறப்பாக கொண்டாடியதுடன் நூற்றாண்டு விழா மலரினையும் வெளிட்டுள்ளது பாடசாலை வரலாற்றில் மேன்மை பொருந்திய சிறப்பாகும்.
யா/ நல்லூர் புனித ஆசீர்வாதப்பர் றோ. க. த. க. வித்தியாலயம்
மகுடவாசகம்:- “உண்மை, தூய்மை, நேர்மை, ஒளிர்க”