நிறுவனம்:மாரிசன்கூடல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் யாழ்/ மாரீசன்கூடல் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலை
வகை பாடசாலைகள்
நாடு இலங்கை
மாவட்டம் யாழ்ப்பாணம்
ஊர் மாரீசன்கூடல்
முகவரி மாரீசன்கூடல், யாழ்ப்பாணம்
தொலைபேசி
மின்னஞ்சல்
வலைத்தளம்

மாரீசன்கூடல் தமிழ் கலவன் பாடசாலையானது இலங்கையின் வடக்கே யழ்ப்பாண மாவட்டத்தில் மாரீசன்கூடல் எனும் இடத்தில் அமைந்துள்ளது. 1880ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாரீசன்பதியில் கோயில் கொண்ட புனித கயிற்றனோ ஆலயத்தின் வளவில் பங்குக் குருக்கள், நிர்வாகிகள் போன்றோரின் பெருந்தன்மையால் ஓலைக் கொட்டிலாக இப் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு சில ஆண்டுகள் ஏட்டுக் கல்வி புகட்டப்பட்டது. பின்பு ஆலயத்தின் பங்குத் தந்தையாக நியமிக்கப்பட்ட வண.பிதா ஜேம்ஸ் அடிகளாரின் முயற்சியால் கற்றூண்களால் அமைக்கப்பட்ட சிறிய அளவிலான கட்டடமாக இப் பாடசாலை அமைக்கப்பட்டது.

1901ஆம் ஆண்டு முதல் அரசு உதவி நன்கொடை திட்டத்தின் கீழ் இப் பாடசாலை பதிவு செய்யப்பட்டது. மேலும் 1977இல் அரசாங்கம் இப் படசாலையை புனருத்தாரணம் செய்தது. 1985ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் பாடசாலையில் அதிபர் உட்பட 5 ஆசிரியர்களும் ஒரு வசதி சேவைக் கட்டண ஆசிரியரும் கடமையாற்றி வந்ததோடு 237 மாணவர்களும் கல்வி பயின்று வந்தனர்.

வளங்கள்

  • நூலக எண்: 13940 பக்கங்கள் 42-43