நிறுவனம்:பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம்
வகை அரச சார்பற்ற நிறுவனம்
நாடு இலங்கை
மாவட்டம் கொழும்பு
ஊர்
முகவரி 58, தர்மராமா றோட், கொழும்பு-06
தொலைபேசி +94-11-2595296,+94-11-2590985,+94-11-2596826
மின்னஞ்சல் info@wercsl.org
வலைத்தளம் http://http://www.wercsl.org/

கொழும்பு -06, 58ஆம் இலக்கம், தர்மராமா வீதியில் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் அமைந்துள்ளது. 35 ஆண்டுகளைப் பூர்த்தி செய்துள்ள இந்த அரச சார்பற்ற நிறுவனம், பல தடைகளை தாண்டியும் தனது பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் ஸ்தாபகர்களாக பேனடீன் சில்வா, குமாரி ஜயவர்தன, செல்வி திருச்சந்திரன் ஆகியோரைக் குறிப்பிடலாம். பெண்கள் கல்வி நிறுவனம் என்று பெயரிடப்பட்டு இந்நிறுவனம் 1982ஆம் ஆண்டில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இது இலங்கையில் பல்வேறு இன்னல்களை அனுபவிக்கும் பெண்களின் நிலையை வெளிப்படுத்துவதற்காக ஆரம்பிக்கப்பட்டது. இந்நிறுவனத்தின் முக்கிய நோக்கம், பெண்களுக்கு விழிப்பணர்வை ஏற்படுத்தி நாட்டின் பொருளாதார, அரசியல், சமூக தளங்களில் வாய்ப்புக்களை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதாகும். 1991ஆம் ஆண்டில் இந்த அமைப்பு பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் என பெயர் மாற்றப்பட்டது. பெண்மைய ஆய்வொன்றை தனது முயற்சிகளில் ஒன்றாக உள்ளடக்கியதையிட்டு இப் பெயர் மாற்றம் உண்டானது. இந் நிறுவனம் பொறுப்பான்மை குழு உறுப்பினர்களையும், நிர்வாக பொறுப்பாளர்கள் ஏழு பேரையும், அறிவுரையாளர் ஒருவரையும் உள்ளடக்கியே இயங்கி வருகிறது. இவர்கள் ஊழியர்களுக்கு தேவையான ஆலோசனைகைளயும் வழிகாட்டல்களையும் வழங்கிய வருகின்றனர். தற்போது இதன் நிர்வாக இயக்குனராக சிராணி மில்ஸ் இருக்கிறார். இவரின் வழிகாட்டலின் கீழ் பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம், பெண்கள் தொடர்பான பல கருத்தரங்கங்களையும் மாநாடுகளையும் நடத்தி வருகின்றது. விசேடமாக பெண்கள் சிறுவர்கள் மீதான வன்முறைகள் எதிராக பல விழிப்புணர்வு நிகழ்வுகளையும் நடத்தி வருகின்றது. பெண்கள் கல்வி ஆய்வு நிலையம் மும்மொழிகளிலும் நிவேதினி என்னும் பாலியல் கற்கை நெறி சஞ்சிகையொன்றை வெளியிட்டு வருகிறது. பெண்நிலைவாத கருத்துக்களை உள்ளடக்கிய சிறிய சஞ்சிகைகள் வெளிவந்த நிலையில் பெண் நிலைவாத கற்கை நெறியை அடிப்படையாகக் கொண்டு எதுவித சஞ்சிகைகளும் ஆங்கிலம், தமிழ், சிங்கள மொழிகளில் இதுவரை வெளிவரவில்லை. இந்த குறையை நீக்குவதற்கான "நிவேதினி" என்ற சஞ்சிகை வெளியிடப்படுகிறது. "பிரவாகினி" என்னும் காலாண்டு செய்தி மடலொன்றையும் மும்மொழிகளிலும் இந்நிறுவனம் வெளியிட்டு வருகிறது. பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனம் ஆறாயிரம் நூல்களை தன்னகத்தே கொண்டுள்ளது. இந்நூலகத்தில் தமிழ், சிங்களம், ஆங்கிலம் ஆகிய மும்மொழியிலும் ஊடகக்கல்வி, சமூகவியல், மானிடவியல், இலக்கிய விமர்சனங்கள், இன அடிப்படையிலான ஆய்வுகள், மனித உரிமைகள் போன்ற பரவலான பிரிவுகளில் பல அறிவு நூல்களையும், பத்திரிகைகளையும், சஞ்சிகைகளையும் சேமித்து வைத்துள்ளது. இந் நூலகம் ஒரு விசேட நூலகமாகும். இதன் வாசகர்கள் பெரும்பாலும் ஆய்வாளர்களாக இருப்பதே விசேட அம்சமாகும். இந் நூலகத்தை பல்கலைக்கழக மாணவர்களும், பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் வெளிநாட்டில் இருந்து வருகை தரும் ஆய்வாளர்களும் பயன்படுத்தி வருகின்றனர்.