நிறுவனம்:பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பாலைதீவு புனித அந்தோனியார் ஆலயம்
வகை ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் பூநகரி
முகவரி பாலைதீவு
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -


இவ் ஆலயமானது போர்த்துக்கேயர் தொடக்கம் பிரித்தானியர் காலம் வரையான காலப் பகுதியில் கத்தோலிக்க மதப்பரவலின் போது விசாலமான கடல் நடுவே சிறிய ஒரு தீவாகிய பாலைதீவு புனித அந்தோனியாரின் புனிதத்தை தாங்கியபடி உதயமாகியது. புனித அந்தோனியாரின் ஆலயத்தை உருவாக்க மூல கர்த்தாகவாக இருந்தவர் அல்லைப்பிட்டியைச் சேர்ந்த சுழியார் மோசேஸ். இவர் தொழில் புரிந்த காலத்தில் அங்கு தொழில் புரிந்த அல்லைப்பிட்டி, நாவாந்துறை,குருநகர், மண்டைதீவு, நவாலி மக்களுடன் தொடர்பு கொண்டு 1895 ஆம் ஆண்டில் ஒரு ஓலைக் கொட்டில் அமைத்து ஊர்காவற்றுறையிலிருந்து அந்தோனியாரின் சுருவம் எடுத்து வரப்பட்டு கொட்டிலில் வைத்து வழிபட்டு வந்தார்கள். 1918 ஆம் ஆண்டில் கல்லினால் கட்ட ஆரம்பிக்கப்பட்டு தற்போது இருக்கும் பீடத்துடன் சேர்த்து சிறு கட்டடம் அமைத்து தற்போது இருக்கும் கோவில் வடிவம் வரை முருகை கல்லினால் கட்டி முடிக்கப்பட்டது. 1936 ஆம் ஆண்டில் அறை கொண்ட வீடும் கட்டப்பட்டது. மூப்பரான சு.மோசேஸ் அவர்களின் இறப்பின் பின் அல்லைப்பிட்டி சுழியார் மார்க்கு மூப்பராகப் பணி புரிந்துள்ளார். அதற்குப் பின் அந்தோனி பேதுருப்பிள்ளை மூப்பராகக் காணப்பட்டார். குருநகரைச் சேர்ந்தவர்களான சிமியோன் பிலிப் என்பவரினால் 1961 ஆம் ஆண்டில் வரவேற்பு அந்தோனியார் சுருபம் அமைக்கப்பட்டு இன்று வரை அவரது குடும்பத்தவரால் பராமரிக்கப்படுகிறது. செல்வம் ஜெயராசா என்பவரால் 1983 ஆம் ஆண்டில் மடுமாதா செரூபம் நிறுவப்பட்டு பராமரிக்கப்படுகிறது, 1964 ஆம் ஆண்டில் புயலால் கூரைகள் அழிவடைந்து 1976 ஆம் ஆண்டில் அருட்தந்தை தேவராஜா அவர்களின் முயற்சியால் பாலைதீவில் தொழில் புரிந்த அனைத்து மக்களாலும் திருத்தியமைக்கப்பட்டது. 1965 ஆம் ஆண்டில் மூப்பர் திரு. அந்தோனி பேதுறுப்பிள்ளை அவர்களினால் திருநாள் முன்னாயத்தம் செய்யும் தொழிலாளருக்குத் தங்குவதற்கு மடம் கட்டப்பட்டது. 1972 ஆம் ஆண்டில் அருட்சகோதரிகள் தங்குவதற்கான ஒரு மடமும் அவரால் கட்டப்பட்டது. 1979 ஆம் ஆண்டில் குருநகரைச் சேர்ந்த ஞானேந்திரம் போட் தொழிலாளர்களினால் மணிக்கூட்டுக் கோபுரமும், தேரும் செய்து கொடுக்கப்பட்டது. 2014 ஆம் ஆண்டு ஞானேந்திரம் போட் தொழிலாளர்களினால் கூடு அன்பளிப்புச் செய்யப்பட்டது. 1982 ஆம் ஆண்டில் குருநகரைச் சேர்ந்த எலியாஸ் ஜெயரட்ணம் என்பவரால் பாலைதீவில் சிலுவைப் பாதை ஸ்தலங்கள் அமைக்கப்பட்டு தற்போது அவரது குடும்பத்தவரால் பராமரிக்கப் பட்டு வருகிறது. போருக்குப் பின்னர் கோவில் புனரமைப்பு 2011, அறைவீடு புனரமைப்பு 2012 மெழுகுதிரி கொழுத்துவதற்கான தனி அமைவிடம் , யாத்திரிகர் வழிபாடு செய்வதற்கான நிழற்கூடாரம் 2013, என இவ் ஆலயத்தில் வளர்ச்சி இடம்பெற்றது. இவ் ஆலயம் வர்த்தமானி பிரசுராலயம் என்பதனால் பூநகரி பிரதேச செயலகம் திருவிழா காலங்களில் தங்களது பங்களிப்பினை ஆற்றி வருகின்றது.