நிறுவனம்:தி/ குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் தி/ குச்சவெளி விவேகானந்தா மகா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் திருகோணமலை
ஊர் குச்சவெளி
முகவரி குச்சவெளி, திருகோணமலை
தொலைபேசி 0262252655
மின்னஞ்சல்
வலைத்தளம்

திருகோணமலை நகரில் இருந்து 34 Km வடக்கே குளமும் மலையும் ஆறும் கடலும் சூழ்ந்த பசுமை நிறைந்த நெல், வயல் நிலமும், பயிர் நிலமும், கடல் வளமும் கொண்ட குளக்கோட்ட மன்னன் கோணேசர் தொண்டுக்காக குடியமர்த்தப்பட்ட மக்கள் வாழும் குச்சவெளி எனும் பழம்பெரும் ஊரில் கல்விப்பணியை செய்து வரும் கல்விக்கூடம் தி/ விவேகானந்தா மகா வித்தியாலயம் ஆகும்.

1953 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, அன்றுத் தொடக்கம் இன்றுவரை கல்விப்பணியில் இப்பிரதேசத்தின் தலைசிறந்த கல்விக்கூடமாக திகழ்ந்து வரும் பாடசாலை இதுவாகும்.

1985 முதல் 1987 வரை முதல் தடவையாகவும், 1990 முதல் 1994 வரை இரண்டாம் தடவையாகவும் இப்பிரதேச மக்கள் முற்றாக இடம் பெயர்வினை சந்தித்த காலத்தில் பாடசாலையும் முற்றாக மூடப்பட்டு 1995ஆம் ஆண்டு மீளத் திறக்கப்பட்டு படிப்படியாக தன் கல்விப்பணியை மீண்டும் செய்து வருகிறது.

தரம் 06 இல் 09 மாணவர்களோடு குச்சவெளி மகா வித்தியாலயம் என்ற பெயருடன் திரு. நா. இராமலிங்கம் அதிபராக நியமிக்கப்பட்டு இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. 1982 இல் க.பொ.த உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டு 1984 இல் முதல் தடவையாக உயர்தரப் பரீட்சைக்கு மாணவர்கள் தோற்றினார்கள். உயர்தரம் ஆரம்பிக்கப்பட்டபோது பாடசாலை 1C தரமாக உயர்த்தப்பட்டது. 39 வருடங்களின் பின்னர் 2018 இல் மீண்டும் க.பொ.த உயர்தர வகுப்பு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

பாடசாலையின் மனிதவளம் மற்றும் பௌதீக வளம் என்பன பற்றாக்குறை யாகத் திகழும் இக்காலக் கட்டத்தில் பாடசாலை பழைய மாணவர்களின் பங்குப்பற்றலுடன் குச்சவெளி உறவுகள் உதவிக்கரம் நீட்டி பாடசாலையின் மனித வள, பௌதீக வள மீளமைப்பு மாணவர்களுக்கான பல வழிகளில் உறுதுணையாக நின்று பிரதேச கல்வியை வளர்க்க துணை நிற்கின்றனர்.


1 தரம் 05 புலமை பரிசில் பரீட்சையில் 2019 ஆம் ஆண்டில் 12 மாணவர்கள் தோற்றி மாணவர்களும் சித்தியடைந்து 100% சித்தி பெற்றனர். செல்வன். த. கோபிசன் (174), செல்வன் பி. லிங்கதீசன் (173) ஆகிய இருவரும் பாடசாலைக்குப் பெருமையைத் தேடி தந்தமை குறிப்பிடத்தக்கதாகும். க.பொ.த சாதாரண பரீட்சை 2019 இல் 20% சித்தியும், 2020 இல் 60% சித்தியும், 2021 இல் 63% சித்தி எனப் படிப்படியாக சித்தி வீதம் அதிகரித்துச் செல்கின்றது.

க.பொ.த உயர்தரப் பரீட்சை மீண்டும் 39 வருடத்திற்குப் பின் 2020 இல் பரீட்சைக்கு 7 மாணவர்கள் தோற்றிய போதும், பல்கலைகழக அனுமதிக்கான சித்திகள் எதுவும் பெறப்படவில்லை. விவசாய விஞ்ஞான பாடத் தெரிவு மாணவர்களின் பெறுபேற்றில் தாக்கத்தை ஏற்படுத்தியிருந்தது. பின்னர் 2021 ஆம் வருடம் இரண்டு மாணவர்கள் தோற்றி இரண்டு மாணவர்களும் நல்ல பெறுபேற்றுடன் சித்தியடைந்து 100% என்ற இலக்கைத் தொட்டனர்.

மாணவர்களின் ஆளுமை விருத்தி, சகிப்புத்தன்மை, தலைமைத்துவப் பண்பு தன்னம்பிக்கை, போன்ற பண்புகளின் வளர்ச்சிக்கும், சிந்தனை சிதறல்கள், நெறிப்பிறழ்வான செயற்பாடுகளைத் தடுக்கவும் கற்றல் செயற்பாடுகளுக்கு மேலதிகமாக இணைப்பாடவிதான செயற்பாடுகள் பாடசாலையில் செயற்படுத்தப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் விளையாட்டுப் போட்டிகள், மன்றச் செயற்பாடுகள், விவசாயத் தோட்டம், பூந்தோட்ட கவின்நிலைப் போட்டிகள், சுத்தம் தொடர்பான பாடசாலை சிரமதானங்கள் குச்சவெளி சித்தி விநாயகர் ஆலய சிரமதானம் திருவிழாக் காலங்களில் ஆலயத் தொண்டு என்பன மேற்கொள்ளப்படுவதோடு முத்தமிழ் மன்றம், இந்துமா மன்றம், சுகாதாரக் கழகம், பான்ட் வாத்தியக்குழு, சுற்றாடல் கழகம் என்பன செயற்படுகின்றன.

1953 இல் தி/ குச்சவெளி மகா வித்தியாலயமாக ஆரம்பிக்கப்பட்டது முதல் இன்று வரை திரு. நா. இராமலிங்கம், திரு. க. பொன்னையா, திரு. பரமானந்தம், திரு. காசிநாதன், திரு. க. பூபாலசிங்கம், திரு. பொன்னுக்கோன், திரு. சிவக்கொழுந்து, திரு. க. கிருபைராஜா, திரு. க. ஜீவரெட்ணம், திரு. ஆ. பொன்னையா, திரு. வி. தங்கராஜா, திரு. அ. நவரெட்ணம், திருமதி. ச.கமலாவதி, திரு. வி. கீதபொன்கலன், செல்வி. சி. தேவரஞ்சினி, செல்வி. க. லிங்கலட்சுமி, திரு. எஸ். ஜெயதரன், திரு. விஷனுவர்தன், திரு. ராஜ்மோகன் ஆகியோர் அதிபர்களாக கடமையாற்றியுள்ளனர்.