நிறுவனம்:கிளி/ புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கிளி/ புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம்
வகை பாடசாலை
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் -
முகவரி உருத்திரபுரம், கிளிநொச்சி
தொலைபேசி 021-320-8226
மின்னஞ்சல்
வலைத்தளம்

இலங்கையின் வடமாகாகணத்தில் கிளிநொச்சி மாவட்டம் நீர் வளம் நிறைந்த செழிப்பான ஒரு பிரதேசமாகும். இம் மாவட்டத்தில் வடக்கு, தெற்கு என இரு கல்வி வலயங்களும் கரைச்சி, கண்டாவளை, பூநகரி, பளை எனும் நான்கு கல்விக் கோட்டங்களும் அமையப்பெற்றுள்ளன. இதில் கரைச்சிக் கோட்டத்தில் கிளிநொச்சி அக்கராயன் பிரதான வீதி அருகே நகரத்தில் இருந்து 7 கி.மீ. தூரத்தில் புதுமுறிப்பு எனும் கிராமத்தில் புதுமுறிப்பு குளத்தின் மருங்கே கிளி/புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம் அமையப் பெற்றுள்ளது. பல சிறப்புக்களைக் கொண்ட புதுமுறிப்பு கிராமத்தில் 1985 ஆம் ஆண்டு ஐப்பசி மாதத்தில் நவமி தினத்தில் அமாவாசை நாளில் சாஜன்ட் என அழைக்கப்படும் அமரர்.மு. இராமநாதன் அவர்களால் இப்பாடசாலை ஆரம்பிக்கப்பட்டது. ஆரமபத்தில் 14 மாணவர்களுடன் கிராம அபிவிருத்தச்சங்க மண்டபத்தில் திருமதி .மகேஸ்வரன் சிவஞானசுந்தரம் செல்வி.ஜெயந்தினி நாகநாதன் ஆகியோரைத் தொண்டர் அடிப்படையில் நியமிக்கப்பட்டு ஸ்தாபகரால் ஒழுங்குபடுத்தப்பட்டுபாடசாரைச் செயற்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டது. கிராம மக்களினதும் ஸ்தாபகரினதும் பெருமுயற்சியினாலும், அயராத உழைப்பினாலும் இப்பாடசாலை 1986 ஆம் ஆண்டு பங்குனி மாதம் 26 ஆம் திகதி கிளி/புதுமுறிப்பு விக்கினேஸ்வரா வித்தியாலயம் எனும் பெயருடன் அரசாங்கப் பாடசாலை ஆக்கப்பட்டது. அதன் முதலாவது அதிபராக திரு. வேலுப்பிள்ளை. மகேசன் அவர்கள் கடமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். ஆரம்பத்தில் தரம் 01 தொடக்கம் 05 வரையான ஆரம்பப் பாடசாலையாகவும், தொடர்ந்து தரம் 09 ற்கான அனுமதியையும், 1990 ஆம் ஆண்டில் க.பொ.த. சாதாரண தரத்திற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்று இப்பிரதேச மாணவர்கள் சிறப்பான கல்வியைப் பெறுவதற்கு வாய்ப்பாக அமையப் பெற்றது. கால ஓட்டத்தில் ஆற்றலும்,அனுபவமும் கொண்ட சிறப்பான அதிபர்கள் பலரால் இப்பாடசாலை செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளது. யுத்த அனர்த்தங்களின் போது இரண்டு இடப்பெயர்வுகளை இப்பாடசாலை சந்தித்துள்ளது. முதற்கட்டம் அக்கராயன் பிரதேசத்தில் குறைந்த அடிப்படை வசதிகளோடு இயங்கி வந்துள்ளது. தொடர்ந்து மீளவும் சொந்த இடத்தில் ஆரம்பிக்கப்பட்டு ஓரளவு சீராக இயங்கிய காலத்தில் மீண்டும் 2008 ஆம் ஆண்டு காலப்பகுதியில் மாவட்டத்தின் அனைத்தப் பாடசாலைகளின் இடப்பெயர்வோடு இப்பாடசாலையும் இடம்பெயர்ந்து முல்லைத்தீவு மாவட்டம் வரை நகர்ந்து அனைத்து உடமைகளையும் இழந்த நிலையில் வவுனியா மாவட்டத்தின் நலன்புரி முகாமில் பெயரை மட்டும் பாதுகாக்கும வகையில் இயங்கி வந்தமை குறிப்பிடத்தக்கது. 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் வன்னியில் ஆரம்பிக்கப்பட்ட போது இப்பாடசாலையும் சொந்த இடத்தில் பௌதீக மற்றும் ஆளணிப்பற்றாக்குறையுடன் 300 இற்கும் மேற்பட்ட மாணவர்களைத் தனதாக்கி இயங்கத்தொடங்கியது. யுத்த காலத்தில் போர் மையமாக இப்பாடசாலை வளாகம் விளங்கியமையால் மண் அரண்கள் மற்றும் மிதிவெடி அபாயப் பிரதேசமாக காணப்பட்ட சூழலில் 2010 ஆம் ஆண்டு இரண்டாவது தவணை தொடக்கம் மாணவர்களது பாதுகாப்புக் கருதி பாடசாலை தற்காலிகமாக மூடப்பட்டு மீளவும் 2011 ஆம் ஆண்டில் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் ஆரம்பிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டில் இரண்டாம் கட்டமாக பாடசாலை ஆரம்பிக்கப்பட்ட போது ஓறத்தாள 447 மாணவர்கள் கல்வி பயின்றார்கள். வெளி மாவட்ட ஆசிரியர்களுடன் எமது மாவட்டத்தை உள்ளடக்கிய வகையில் 26 ஆசிரியர்கள் கணியாற்றினார்கள். ஊற்றுப்புலம், செல்வாநகர், சோலைநகர், சாலோம்நகர் ஆகிய கிராமங்களில் இருந்து மாணவர்கள் வருகை தந்தார்கள். தரம் 05,தரம் 11 பொதுப்பரீட்சையின் பெறுபேறுகள் ஆரமபத்தில் குறைந்தளவில் காணப்படினும் 2014 ஆம் ஆண்டின் பின் படிப்படியாக அதிகரித்து 2017 ஆம் ஆண்டின் பின்னர் 65 வீதத்திற்கும் மேற்பட்டதாக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது. தற்போது இப் பாடசாலையில் மாணவர் தொகை 330 ஆகக்காணப்படுவதுடன் மகாதேவச் சிறுவர் இல்லத்தின் பராமரிப்பில் இருந்து வருகின்ற 65 இற்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். ஊற்றுப்புலம் , செல்வாநகர்ப் பாடசாலைகளில் க.பொ.த. சாதாரண தர வகுப்புக்கள் ஆரம்பிக்கப்பட்டமை மாணவர்கள் தொகை வீழ்ச்சிக்கு காரணமாக அமையப் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. 2017 ஆம் ஆண்டு காலப்பகுதிக்குப் பின் க.பொ.த உயர்தரம் கற்ற இப்பாடசாலை மாணவர்கள் வைத்தியத்துறை,பொறியியல் துறை, கலைத்துறை எனப் பல்வேறு துறைகளில் கல்வி பயின்று பல்கலைக்கழக அனுமதி பெற்றள்ளமை சிறப்பம்சமாகும் . க.பொ.த. காதாரண தரத்தில் 2019 ஆம் ஆண்டு 37;26 மாணவர்கள் தகுதி பெற்றுள்ளதுடன் 2020 ஆம் ஆண்டில் 38;30 மாணவர்கள் க.பொ.த உயர. தரத்திற்கு தகுதி பெறுவார்கள் என்பதும் ஊறுதிப்படுத்தப்பட்டுள்ளது. கலைத்திட்டச் செயற்பாடுகளுக்கு மேமலாக விளையாட்டுத் துறையிலும் கடந்த மூன்று வருடங்களாக மாவட்ட, மாகாணச் சாதனைகளை எமது பாடசாலை உருவாக்கியுள்ளது. மெய்வல்லுனர்,உதைபந்து, வலைப்பந்து போன்ற போட்டிகளில் 2019 ஆம் ஆண்டு மாகாணச் சாதனை பெற்றதுடன் 2020 ஆம் ஆண்டில் மெய்வல்லுனர் மற்றும் வலைப்பந்து அணியினர் தேசிய மட்டம் செல்லும் வாய்ப்பினை எட்டியுள்ள நிலையில் COVID-19 நோய் எமக்குத் தடையாக அமையப் பெற்றமை எமது மாணவர்களின் சாதனைக்குப் பெரும் தடையாக அமையப் பெற்றமை எமது மாணவர்களின் சாதனைக்குப் பெரும் இடராக அமைந்துள்ளது. பாடசாலையின் இவ்வகையான வெற்றிகளுக்கு பாடசாலைச்சமூகம், பெற்றோர், ஆசிரியர்,மாணவர்களின் நன்னெறிச் செயற்பாடுகள் பக்க பலமாக அமைந்து வருகின்றமை இப்பாடசாலையின் வளர்ச்சிக்குப் பெரம தணையாக விளங்குகின்றது.