நிறுவனம்:கிளி/ கண்ணகைபுரம் அ. த. க. பாடசாலை
பெயர் | கிளி/கண்ணகைபுரம் அ.த.க.பாடசாலை |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | கண்ணகைபுரம் |
முகவரி | கண்ணகைபுரம் |
தொலைபேசி | - |
மின்னஞ்சல் | - |
வலைத்தளம் | - |
கிளிநொச்சி மாவட்டத்தின் இயற்கை வளம் கொழிக்கும் கண்ணகைபுரம் கிராமமானது அக்கராயன் அழகுக்கிராமமாகவும், வயலாலும் வனத்தாலும் சூழப்பட்ட தெங்குப்பயிரும் தோட்ட நிலமும் கொண்ட ஒரு எழில் மிக்க கிராமமாகத் திழ்கின்றது. படித்த இளைஞரின் ஒருங்கிணைப்பில் பயிர்ச்செய்கைக்காக வழங்கப்பட்ட இந்நிலமானது ஆரம்ப காலத்தில் நஞ்சுண்ட காடு என அழைக்கப்பட்டது. இங்கு முன்பு ஒருவர் நஞ்சுண்டதால் இப்பெயர் வழங்கப்பட்டது. இக்கிராமம் 1969 ஆம் ஆண்டு காலப்பகுதியில் அக்கராயன் குளத்தின் நீர்ப்பாசனத்தின் கீழ் ஸ்கந்தபுரப் பிரதேச மக்களின் பிரதான உப உணவுச்செய்கைக்காக வழங்கப்பட்டது. மூன்று பிரதான வீதிகளையும், ஆற்று வாய்க்கால், பூநகரி வாய்க்கால், 27 ஆம் வாய்க்கால் எனும் அடிப்படையில் கிராமத்தின் மக்கள் பரம்பல் உள்ளது. தற்பொழுது அக்கராயன் ஆற்றின் மேற்பகுதியில் பள்ளமான பகுதிகளில் குடிவாழ்ந்த மக்களுக்கு குடியிருப்பினை அமைத்து வாழ்வழிக்கும் இடமாகவும் உள்ளது. அயற்கிராமத்தில் இருந்து தோட்ச் செய்கைக்காக வந்த பலர் தமது வாழிடங்களை அமைத்து கண்ணகை அம்மன் குடிகொண்டதனால் இக்கிராமம் கண்ணகைபுரம் எனப் பெயர் பெறலாயிற்று. 1995.01.01 ஆம் திகதியன்று பொதுத்தேவைக்காக ஒதுக்கப்பட்ட இடத்தில் பாடசாலை உதயமானது. இக்கிராமம் படித்த வாலிபர் திட்டம் என்ற பெயர் இருந்ததை மாற்றி கண்ணகைபுரம் என அழைக்கப்பட்டது. இப் பாடசாலை 1995.01.01 அன்று ஆரம்பிக்கப்பட்டு தற்போது 1-5 வரையான வகுப்புக்களைக் கொண்ட ஆரம்பப்பிரிவுப் பாடசாலையாக இயங்கி வருகிறது. 51 மாணவர்களுடன் சிறந்த கல்விச் செயற்பாடு நடந்து வருகிறது.