நிறுவனம்:கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம்
பெயர் | கிளி/ இராமநாதபுரம் மகா வித்தியாலயம் |
வகை | பாடசாலை |
நாடு | இலங்கை |
மாவட்டம் | கிளிநொச்சி |
ஊர் | இராமநாதபுரம் |
முகவரி | இராமநாதபுரம், கிளிநொச்சி |
தொலைபேசி | 021 2060690 |
மின்னஞ்சல் | knrmv56@gmail.com |
வலைத்தளம் | - |
1955 ஆம் அண்டு விவசாயக் குடியேற்றத் திட்டமாக உருவாக்கப்பட்ட இராமநாதபுரம் கிராமத்தில் 1956 ஆம் ஆண்டு 05 ஆம் மாதம் 02 ஆம் திகதி இப்பாடசாலைக்கு இராமநாதபுரம் அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயரோடு திரு ச.நமசிவாயம் அவர்களை அதிபராகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டது அப்போதைய காலத்தில் ஒரு ஆண் ஆசிரியர்,இரு பெண் ஆசிரியர்களும் 90 மாணவர்களும் மட்டுமே இருந்தனர்.
1960 ஆம் ஆண்டு திரு. சங்கரப்பிள்ளை அவர்கள் அதிபராக பொறுப்பேற்றார். இவர் கற்றல் செயல்பாட்டுடன் இணைப்பாடவிதான செயற்பாடுகளிலும் ஊக்கம் காட்டி பாடசாலையில் விளையாட்டு போட்டிகளை நடத்தி பெற்றோர், மாணவர்கள் மனதில் பாராட்டுக்களை பெற்றார்.
1963 ஆம் ஆண்டு கந்தையா அவர்கள் அதிபராகக் வந்தகாலத்தில் வகுப்புக்கள் தரம் 8 வரை உயர்த்தப்பட்டன.1964ஆம் ஆண்டு பொன்னம்பலம் அவர்கள் அதிபராக வந்த காலத்தில் முதன் முதலாக கல்வி பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சைக்கு விண்ணப்பித்து பரீட்சை எழுதி சித்தியும் அடைந்தனர்.
1966 ஆம் ஆண்டு இப்பாடசாலை மகாவித்தியாலயம் ஆக தரம் உயர்த்தப்பட்டு கிளி/ இராமநாதபுரம் வடக்கு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை என்ற பெயர் மாற்றப்பட்டு இராமநாதபுரம் மகாவித்தியாலயம் என்ற பெயரை பெற்றது .பாடசாலையின் கொடியின் நிறம் சிவப்பு. பாடசாலை சின்னத்தில் ஏர் நெற்கதிர் கோபுரம் என்பவற்றை கொண்டதாக அமைந்தது . ஏட்டிற்கும் ஏருக்கும் ஏற்றம் தருவோம் என்பது மகுடவாக்கியமாகும்.