நிறுவனம்:கனகபுரம் பாலவிநாயகர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் கனகபுரம் பாலவிநாயகர் ஆலயம்
வகை இந்து ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் கனகபுரம்
முகவரி இல-62, 6ஆம் பண்ணை, கனகபுரம்
தொலைபேசி
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இவ்வாலயத்தின் தர்மகர்த்தாவாகிய சுப்பிரமணியம் வேதநாயகம் அவர்கள் 1962 ஆம் ஆண்டு இங்கு வந்துள்ளார். அவர் தனக்குக் கிடைத்த 62 ஆம் இலக்கக் காணியைத் துப்புரவு செய்து கொண்டிருந்த போது களைப்புற்று காணியில் நின்ற பாலைமர நிழலில் இளைப்பாறியபடி கண்ணயர்ந்து உறங்கியுள்ளார். அப்போது அவரது மார்பில் ஒரு குட்டி யானை வந்து காலை வைத்து மிதித்தது போன்று உணர்ந்து பதறிப்போய் துடித்தெழுந்து ஓடியுள்ளார். அடுத்து வந்த நாடகளில் இந்தச் செய்தி ஊரவர் செவி சேர்ந்த போது ”இது பிள்ளையாரின் அருட்கடாட்சம்” ஏனெனில் ஒரு நாளும் ஒரு யானையும் இங்கு வரவில்லை. ஆகையால் இது பிள்ளையாரின் அடையாளம் என ஆளுக்கு ஆள் கூறி அவ்விடத்தில் கோயில் ஒன்றை அமைக்கத் தூண்டினார்கள்அmதன் துலங்கலாக வேதநாயகம் அவர்கள் பாலவிநாயகரை மனதில் நிறுத்தி குறித்த பாலமரத்தை தல விருட்சமாகக் கொண்டு அதன் கீழ் ஆனைமுகன் வடிவை ஒத்த சிறிய கல் ஒன்றை வைத்து நாள்தோறும் வழிபட்டு வந்தார். விநாயகப் பெருமானின் விசுவாசம் மேலிட அவர் 1995 ஆம் ஆண்டு சிறிய அளவில் ஆலயம் ஒன்றினை நிர்மாணித்து கும்பாபிஷேகத்தைச் செய்தார். 1996 ஆம் ஆண்டு நடைபெற்ற இடப்பெயர்வின் போது பராமரிப்பாளர் இன்றி படைத்தாக்கத்தாலும் ஆலயம் பெருத்த சேதத்திற்குள்ளானது. மீண்டும் 2000ஆம் ஆண்டிற்குப் பின்பு மக்கள் மீளக்குடியமர்ந்த போது தர்மகரமத்தாவான வேதநாயகம் அவர்கள் புலம்பெயர்ந்து உறவுகளிடம் சென்றிருந்தார். அதனால் இவரது தந்தையும் ஆலயத்தின் அயலவர்களும் இணைந்து புனரமைத்து காலை,மாலை நேரப்பூஜைகளை பூசகரை வைத்து நடாத்தி வந்தனர். 2008 ஆம் ஆண்டு இறுதி யுத்த இடம்பெயர்வின் போது ஆலயம் பேரழிவைச் சந்தித்தது. வந்தாரை வரவேற்று வாழவைக்கும் வன்னிப் பெருநிலப்பரப்பின் கிளநொச்சி மாநகரை அண்டியுள்ளது கனகபுரம் கிராமம். வனப்பு மிகுந்த இக்கிராமத்தின் மத்தியில் பிரதான வீதிக்கு அருகில் 6 ஆம் பண்ணை 62 ஆம் இலக்க காணியில் இவ்வாலயம் அமைந்துள்ளது பாலவிநாயகர் ஆலயம். அmவ்விடம் எழுந்தருளி அருள் பாலித்து வரும் ஆலயத்தினுடைய தர்மகர்த்தாவாகிய சு.வேதநாயகம் அவர்கள் தனக்கு விநாயகப் பெருமான் அருளினால் கிடைத்த அற்புதங்களினாலும் பணத்தினாலும் ஆலயத்தினை சிறப்புற வெகு விரைவில் கட்டி முடித்துள்ளார். இவற்றுடன் நின்று விடாமல் இனி வரும் காலங்களிலும் மிகுதி வேலைகளை செய்து முடிக்க வேண்டும் என்றே அவர் எண்ணியுள்ளார். மீண்டும் 2010 ஆம் ஆண்டு மீள்குடியேற்றம் ஆரம்பிக்கப்படுகையில் சு.வேதநாயகம் அவர்கள் விநாயகப் பெருமான் மீது கொண்ட நம்பிக்கையாலும் அவருக்கு ஒரு ஆலயம் அமைக்க வேண்டும் என்ற பேராசையுடனும் ஆவலுடனும் கனடாவில் இருந்து இங்கு வந்து சேர்ந்தார்.இங்கு வந்தவுடன் கிழக்கு வாசல் கொண்டமைந்த குலதெய்வக் கோயிலைக் கட்டத் தொடங்கினார். முன்னர் இருந்த அதே தளத்தில் தனது சொந்தச் செலவில் கனகபுரம் கிராமத்தில் பெரிய ஆலயமாக நிர்மாணித்து 2012 ஆம் ஆண்டுபெரியளவில் மமகாகும்பாபிஷேகத்தையும் செய்து பக்தர்களின் வழிபாட்டிற்கு உதவினார். ஆலயத்தில் பாலவிநாயகருடன் நாகலிங்கம், மகாலக்சுமி,விஷ்ணு,ஆஞ்சநேயர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான் சகிதம், நவக்கிரகங்கள், காவல் தெய்வமான வைரவ கடவுளும் பரிகாரங்களாக வீற்றிருந்து வேண்டுவோர் குறை தீர்த்து வருகின்றார்கள்.பூசகரால் தினமும் அரண்டு வேளைப்பூஜைகள் நடைபெற்று வருகின்றது. இது தவிர விநாயகப் பெருமானுக்குரிய விசேட பூசைகளான மாதாந்த சதுர்த்தி, ஆவணி சதுர்த்தி, பிள்ளையார் பெருங்கதை அத்துடன் வரலக்சுமி காப்பு, கௌரி காப்பு, திருவெம்பாவை, கிரகசாந்தி போன்றனவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.ஆண்டு தோறும் சித்திரை மூல நட்சத்திரத்தை இறுதி நாளாகக் கொண்டு பத்து நாள் அலங்காரத் திருவிழாவும் சுற்றத்தார் ஒன்றிணைந்து நடாத்தி வருகின்றார்கள். இந்த ஆலயம் தனிப்பட்ட தர்ம கர்த்தாவின் பராமரிப்பில் இருந்தாலும் எவ்வித பாராபட்சமும் இன்றி அனைவரும் வந்து வழிபடக்கூடிய நற்சூழல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. நம்பி வந்தவர்க்கு நல்லருள் பாலிக்கின்றமையால் அடியார்கள் மத்தியில் கனகபுரம் பாலவிநாயகர் ஆலயம் மிகந்த அருள் சிறப்பினைக் பெற்றுள்ளது. அதனால் இன்னார்,இனியார் என்றில்லாது இறையடியார்கள் வந்து உபயங்களை ஏற்றுச் செய்கின்றார்கள். அதுவே சாதாரண ஓலைக்கொட்டகையுடன் ஆரம்பிக்கப்பட்ட இந்த ஆலயம் தற்போது கனகபுரத்தில் பெரிய ஆலயமாக விருட்சம் பெறுவதற்கு வழி வகுத்தது எனலாம்.இக் கிராமத்தை மையமாகக் கொண்ட இவ்வாலயத்தின் உபயங்களை அயற்கிராமங்களான ஆனந்தநகர், ஜெயந்திநகர், அம்பாள்குளம்,செல்வாநகர், திருநகர்,உதயநகர் போன்ற கிராமத்து அடியார்கள் பங்கெடுப்பது இவ்வாலயத்தின் சிறப்பாகும்.