நிறுவனம்ːகிளி/ புனித சூசையப்பர் ஆலயம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புனித சூசையப்பர் ஆலயம்
வகை கிறிஸ்தவ ஆலயங்கள்
நாடு இலங்கை
மாவட்டம் கிளிநொச்சி
ஊர் வட்டக்கச்சி
முகவரி வட்டக்கச்சி, கிளிநொச்சி
தொலைபேசி 0772636303
மின்னஞ்சல் -
வலைத்தளம் -

இந்துமா கடல் நடுவே முத்தென விளங்கும் ஈழ நாட்டின் வடபால் அமைந்த இரணைமடு வாவி சூழ் வளம் நிறைந்த கிளிநொச்சி மாநகரில் நெல், தென்னை, மா, பலா முதலிய வளங்களை தன்னகத்தே கொண்ட வட்டக்கச்சியில் 1993 ஆம் ஆண்டு கொலனி குடியேற்ற திட்டமான கட்சன் வீதிக்குக் உட்பட்ட பகுதிகள் குடியேற்றம் செய்யப்பட்டன. அந்தக் காலப்பகுதியில் கிறிஸ்தவ மக்களை ஒன்றிணைத்து நல்வழிப்படுத்தும் நோக்கில் அருட்தந்தை சூசை நாதர் ,அருட்தந்தை செல்வரத்தினம் ஆகிய இருவரும் இணைந்து கிறிஸ்தவ குடும்பங்கள் ஆகிய மரியநாயகம், வஸ்தியாம்பிள்ளை, ஜோசப் ஆகியோரின் இல்லங்களில் செப வழிபாடுகள் ஆரம்பித்தனர்.

அதன்பின்னர் அருட்தந்தை சூசைநாதரும் அருட்தந்தை செல்வரத்தினம் ஆகியோர் இணைந்து கிறிஸ்தவர்களின் உதவியுடன் தற்போது ஆலயம் உள்ள பகுதியில் சிறு கொட்டில் அமைத்து வழிபட்டு வந்தனர்.

1962 ஆம் ஆண்டளவில் சூசையப்பர் ஆலயத்திற்கு வழங்கப்பட்ட காணியில் சிறிய அளவிலான ஆலயம் அமைக்கப்பட்டு அங்கு திருப்பலி பூஜைகள் நடைபெற்றன. அந்த காலப்பகுதியில் முதலில் வட்டக்கச்சியில் பங்கு தந்தையாக அருட்தந்தை ஞானரட்ணம் அடிகளார் 1982 ஆம் ஆண்டு காலப்பகுதியில் பொறுப்பேற்றார். கடந்த 2009 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக ஆலயத்திற்குள் எவ்விதமான சேதங்களும் ஏற்படவில்லை என்பது ஒரு சிறப்பான விடயமாகும். தற்போது இந்த பங்கானது வட்டக்கச்சி புனித சூசையப்பர் ஆலயம் ,இராமநாதபுரம் புனித ஆரோக்கியநாதர் ஆலயம், கல்மடுநகர் புனித பத்தாம் பங்கு நாதர் ஆலயம் என 3 ஆலயங்களாகும். தூய அன்னை வேளாங்கண்ணி ஆலயம், கல்மடு நகர் புனித அந்தோணியார் ஆலயம் என இரண்டு யாத்திரை தலங்கள் உள்ளடக்கி சிறப்பான முறையில் இயங்கி வருகிறது.

கட்சன் வீதி சந்திக்கும் அளகு சேர்க்கும் வகையில் நமது ஆலய வளாக மூலையில் அமைந்திருக்கும் இருதய ஆண்டவர் திருச்சொரூபமானது சந்தியால் நடமாடும் ஒவ்வொருவரையும் மத வேறுபாடின்றி ஒரு கணம் தலை குனிந்து இருகரம் கூப்பி வணங்க வைக்கிறது. இந்த இருதய ஆண்டவரை வட்டக்கச்சி கட்சன் வீதியில் வசித்த எமது பங்கினை சேர்ந்த திரு மரியநாயகம் அன்ரன் ஜோசப் என்பவரான சித்திரக்கலை பாட ஆசிரிய ஆலோசகர் அவர்களால் உருவாக்கப்பட்டது. 1982 ஆம் ஆண்டு பணிகள் ஆரம்பிக்கப்பட்டு மூன்று மாத காலத்திற்குள் இதன் சிற்ப வேலைகள் முடிவுற்றது. இடப்பெயர்வின் காரணத்தால் இருதய ஆண்டவர் இதயத்திற்கு அருகாமையில் சிறு சேதம் ஏற்பட்டு மேற்படி ஆசிரியரால் திருத்தம் செய்யப்பட்டது .