ஆளுமை: லீலாவதி பாலசிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லீலாவதி
தந்தை ஐயாத்துரை
தாய் பூரணம்
பிறப்பு 1928.01.03
இறப்பு --
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லீலாவதி பாலசிங்கம் 1928.01.03 யாழ்ப்பாணம் நீராவியடி என்னும் பெயர் பெற்ற குறிச்சியில் "ஆனந்த வாசம்” எனும் இல்லத்தில் பிறந்தார். இவரது தந்தை கந்தவனம் ஐயாத்துரை, தாயார் பூரணம் அம்மையார் ஆவார். இவர் ஆரம்பக்கல்வியை யாழ். இந்துக் கல்லூரியிலும் பின் யாழ் வேம்படி மகளிர் கல்லூரியிலும் உயர்கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரியிலும் கற்றார். பின்னர் இந்தியா சென்று சைதாப்பேட்டையிலுள்ள இளைஞர் கிறிஸ்தவ மன்றத்தில் (YMCA) உடற்கல்வி நெறியை பயின்று அதனை அனுபவரீதியாக உணர்ந்து மீண்டும் தாய்நாட்டிற்கு விரைந்தார். தனது தாயகத்தின் வளர்ச்சிக்காக புகழ் பூத்த கல்லூரிகளான மியூசியஸ் கல்லூரி கட்டுகஸ்தோட்டை அர்ச். அந்தோனியார் கல்லூரி, யாழ். இந்து மகளிர் கல்லூரி, யாழ் வைத்தீஸ்வராக் கல்லூரி, யாழ். கதிஜா முஸ்லீம் மகாவித்தியாலயம் ஆகியவற்றில் தான் பெற்ற கல்வியையும் அனுபவத்தையும் ஆசிரியத் தொண்டின் மூலம் மாணவ சமுதாயத்திற்கு ஊட்டினார் கடமை தவறாத சிறந்த கற்பித்தல் மூலம் மாணவர்களையும். ஆசிரியர்களையும், அதிபர்களையும் மற்றும் வேற்று பாடசாலை வீரர்கள், வீராங்கனைகளையும் ஏன்? பெற்றோர்களைக் கூட தன்பால் ஈர்த்த சாதனை இவரையே சாரும்.

இவர் பள்ளிப்பருவத்திலும் சாதனைகளை நிலைநாட்டத் தவறவில்லை. வேம்படி மகளிர் கல்லூரியில் பயின்றபோது உயரம் பாய்தலில் அகில இலங்கையில் இவருக்கு முன்பிருந்த சாதனையை தகர்த்தெறிந்து புதிய சாதனையை நிலை நாட்டினார். சைதாப்பேட்டையில் Madras State Olympic Champions திகழ்ந்தார். சென்னையில் கலாசாலைகளுக் கிடையிலான போட்டியில் சென்னை பெண்கள் கிறிஸ்தவக் கல்லூரி மாணவி மோயிஸ் அரியரட்ணம் அவர்களுடன் இணை சம்பியனாக விளங்கினார்.

இவர் மயில்வாகனம் பாலசிங்கம் என்ற சட்டத்தரணியை கைப்பிடித்து நான்கு நற்புத்திரர்களைப் பெற்றெடுத்தார். முதற்செல்வம் ஞானலஷ்மி (ஆங்கில ஆசிரியை) இரண்டாம் செல்வம் ஆனந்த லஷ்மி ஞானசம்பந்தன் (விளையாட்டு வீராங்கனையும் கணக்காளரும் U.K) மூன்றாவது செல்வம் கஜேந்திரா (பொறியியலாளர், அவுஸ்திரேலியா ) கடைச்செல்வம் (பொறியிலாளர், சிங்கப்பூர்) அமரேந்திரா. இவரின் புகழ்பெற்ற உடன்பிறப்புக்களானவர்கள் கலாநிதி கருணானந்தன் (பேராதனை பல்கலைக்கழகம்) திருமதி. பத்மாவதி ஜெயசீலன் இளைப்பாறிய நீதிமான் சிவானந்தன், இளைப்பாறிய திருமதி. அங்கயற்கண்ணி சிவப்பிரகாசபிள்ளை (இளைப்பாறிய உபஅதிபர் யாழ். இராமநாதன் கல்லூரி) திருமதி. திலகவதி விஜயரட்ணம் (இளைப்பாறிய ஆசிரியர் கொழும்பு மகளிர் கல்லூரி) சிவயோகவல்லி (இளைப்பாறிய ஆசிரியர் யாழ். இராமநாதன் கல்லூரி ) எப்பொழுதும் புன்முறுவல் தவழ ஹாசியமாகப் பேசி மற்றவர்களை சந்தோசப்படுத்துவது மட்டுமல்லாமல் வயிறு குலுங்க சிரிக்க வைப்பதில் அவருக்கு நிகர் அவரேதான். மற்றவர்கள் சிரிக்கும் போது ஒன்றும் தெரியாத மாதிரி பாசாங்கு செய்வார். நேரங்களில் கைகொட்டிச் சிரிக்கும் போது அவர் முகத்தில் காணும் மலர்ச்சியை ஏவராலும் மறக்க முடியாது. எதையும் அதிகமாக பொருட்படுத்தமாட்டார். இது அவரது கன்மை எனலாம்.

தனக்குள் எற்பட்ட நோயைத் தன்னுள்ளே அமர்த்தி வைத்து எதுவும் ஏற்படவில்லை என்பது போல் மகிழ்ச்சிப் புன்முறுவலுடன் தனது கடமையை செவ்வனே செய்து வந்தார். 1974ம் ஆண்டில் கணவரின் மறைவின் பின் தனித்து நின்று தனது பிள்ளைச் செல்வங்களை பார் புகமும் உயர் அந்தஸ்திற்கு உயர்த்திய புகமுடனும், மன நிம்மதியுடனும் அப்பர் பெருமானுடைய குருபூசைத் தினமாகிய சித்திரைச் சதயத்தில் இறைவனின் திருவடியில் சாண்புகுந்தார்