ஆளுமை: திவ்யசிரோன்மணி நாகராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் திவ்யசிரோன்மணி
தந்தை நாகராஜா
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் நயினாதீவு
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

திருமதி. திவ்யசிரோன்மணி நாகராஜா அவர்கள் நயினாதீவைப் பிறப்பிடமாகக் கொண்ட இவர் ஆரம்பக்கல்வியை நயினாதீவிலும். இடைநிலைக் கல்வியை, புலமைப்பரிசில் பெற்றதன் மூலம். வேலணை மத்திய கல்லூரியிலும் மேற்கொண்டார். உயர்தரக் கல்வியை இராமநாதன் கல்லூரியில் கல்வி பயின்றார். ஆரம்பக்கல்வியை இங்கே விளையாட்டுத்துறையில் மிகச்சிறந்த ஓட்ட வீராங்கனையாக விளங்கி வருடாவருடம் வெற்றிக் கிண்ணத்தைச் சுவீகரித்துக் கொண்டதுடன், வலைப்பந்தாட்டக் குழுவிலும் அங்கம் வகித்து, தேசிய ரீதியான போட்டிகளிலும் கலந்து கொண்டார். தனது. பட்டப்படிப்பை, பேராதனைப்பல்கலைக்கழகத்தில் மேற்கொண்ட இவர் இளங்கலைமாணி, பட்டப்படிப்பின் போது, வரலாற்றைச் சிறப்புப்பாடமாகக் கற்று அதில் இரண்டாம் வகுப்பு மேல் நிலையில் (Second Class upper division ) தேர்ச்சி பெற்றார். தெடர்ந்து பேராதனைப்பல்கலைக்கழகத்தில் 1972-1974 வரை தற்காலிக விரிவுரையாளராகக் கடமையாற்றினார். அதனைத் தொடர்ந்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலும், 1976ம் ஆண்டு வரை விரிவுரையாளராகக் கடமையாற்றினார் கலகலப்பான, மாணவியாக விளங்கிய இவர் இராமநாதன் கல்லூாயில் உயர்தரக்கல்வியை கற்றபோது. அங்குள்ள மாணவியர் விடுதியில். தங்கியிருந்து கல்வி கற்றவர். அப்போது பல நாடகங்களில் பங்கேற்றும். அவற்றை நெறிப்படுத்தியும், தனது ஆற்றலை வெளிப்படுத்தினார். பின்னர் ஆசிரிய நியமனத்தைத் தனது சொந்த ஊராகிய நயினாதீவிலேயே பெற்றுக் கொண்டார். இங்கே சுமார் மூன்று வருடங்கள் சேவையாற்றி, தான் பிறந்த ஊருக்கு சேவை செய்யும் வாய்ப்பை பெற்றார். பின்பு இரண்டு வருடங்கள், கொழும்பு விவேகானந்தாக் கல்லூரியில் கடமையாற்றிய பின் மீண்டும் நயினைதீவு மகா வித்தியாலயத்தில் 21-10-83 வரை கடமையாற்றினார். அதைத் தொடர்ந்து யாழ்ப்பாணம் சென். மேரீஸ் வித்தியாலயத்தில் மூன்று வருடங்கள் கடமையாற்றிய பின், பட்டப்பின் கல்வியியலில் டிப்ளோமாபட்டத்தை யாழ்ப்பாணப்பல்கலைக் கழகத்தில் பெற்றுக் கொண்டார். திருநெல்வேலி முத்துத் தம்பி வித்தியாலயத்தில் மூன்று வருடங்கள் கடமையாற்றிய பின்பு கோண்டாவில் இந்து மகாவித்தியாலயத்திலும், ஏழாலை மகாவித்தியாலயத்திலும் கொத்தணி அதிபராகக் கடமையாற்றினார். அதன் பின் சுமார் மூன்று மாதங்களுக்கு யாழ்ப்பாண வலயக் கல்வியலுவலகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். நுண்மாண்புலமும், நூலறிவும் மிக்க இவர், யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் . 20-10-1993 அதிபரானார். இவரால் யாழ்ப்பாணம் இந்து மகளிர் பெருவளர்ச்சி கண்டது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த. யாழ்ப்பாணத்து மக்கள் இடப்பெயர்வும் இவரின் பதவிக்காலத்திலேயே இடம் பெற்றது. பயங்கரமான யுத்த அரக்கன் எமது பாடசாலையையும் விட்டு வைக்கவில்லை. இக்காலகட்டத்தில், ஆசிரியவளம். மாணவ வளம், பௌதீகவளம் முதலிய சகல வளங்களும் குன்றி, கல்லூரி சின்னாபின்னமாகிக் கிடந்தது. ஆதனை அவர் ஒவ்வொன்றாக, பல அரிய முயற்சிகளின் மூலம், திணைக்களத்தின் உதவியுடனும், பாடசாலை அபிவிருத்திச் சங்க உதவியுடனும், பழைய மாணவர் சங்க வெளிநாட்டு கொழும்பு கிளைகளின் உதவியுடனும், புனரமைத்தார். இக்காலத்தில், கல்லூரியின் அனைத்துக் கட்டடிங்களும். புனரமைப்புச் செய்யப்பட்டன. விடுதிக்கட்டிடத்தின் ஒரு பகுதியை, அதிபர் விடுதியாகச் செப்பனிட்டு, அங்கேயே வசித்து. பாடசாலையின் அனைத்து நடவடிக்கைகளையும் தனது நேரடிக் கவனத்திற்குக் கொண்டு வந்தவர். புதிய விஞ்ஞான கூடம். கணனிப்பிரிவு, நூல்நிலையம். கட்புல செவிப்புல சாதனங்கள் செயற்படுத்தும் அறை என்பன புதிதாக அமைக்கப்பட்டு, அவற்றிற்குத் தேவையான கணனிகள், உபகரணங்கள், பழைய மாணவர் சங்கத்துடனும், திணைக்களத்துடனும் தொடர்பு கொண்டு பெற்றுக்கொடுத்தார். இங்கு கணனிப்பிரிவு, நூல் நிலையம் என்பன முழுமையான அளவில் மிகச்சிறப்பாக இயங்குகின்றன. ஆழ்ந்த புலமையும், பரந்த அறிவும் கொண்ட இவர், வசீகரமான பேச்சாற்றல் கொண்டவர். இவர் தொடர்பாடல் திறன் மிக்கவர். யாரையும் தனது. ஆழ்ந்த நட்புரிமை தழுவிய வார்த்தைகளினால் கவர்ந்து விடுவார். இதன் மூலம் அவர் பல பழைய மாணவிகளின் மனங்களை வென்றுள்ளார் ஆசிரியர்களோடு நெருங்கிய நட்புடனும் நேசமனப்பான்மையுடனும் பழகுபவர், சக ஆசிரியர்களின் குடும்பங்களில் நிகழும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொள்வார். தேவையான சந்தர்ப்பங்களில் உடுக்கை இழந்தவன் கைபோல உதவும் தயாளகுணமும் பெருந்தன்மையும் மிக்கவர். அது மட்டுமல்ல, மதிநுட்பமிக்க ஆலோசனைகளையும் வழங்கி வழிநடத்துபவர். நிர்வாகத்திறமை, என்பது தப்புக்கண்டு பிடிப்பது அல்ல, தட்டிக்கொடுத்து. வேலைவாங்குவதிலேயே தங்கியிருக்கிறது. "காட்சிக் கெளியன் கடுஞ்சொல்லன் அல்லனேல் மீக்குறம் மன்னன் நிலம்" என்ற குறள். மன்னனுக்கும் நிலத்திற்கும் மட்டுமல்ல, எந்த ஒரு தலைவனுக்கும், அவனது ஆட்சிக்கும் பொருந்தும். யாழ்ப்பாணாம் இந்து கல்லூரியில் இடம்பெற்ற கலை கலாச்சாரத்தில் பற்றுறுதியும். மாணவர்கள் ஆசிரியர்களிடம் ஆழ்ந்த அன்பும் நிர்வாக ஆளுமையுமுள்ள நல்லதொரு அதிபரைப்பெற்று பயனுற்று வளர்ச்சியைக் கண்டிருக்கிறது.