ஆளுமை: ஞானேஸ்வரி ஞானசேகரம்
பெயர் | ஞானேஸ்வரி |
தந்தை | செல்லையா |
தாய் | நாகம்மா |
பிறப்பு | 1935.05.04 |
இறப்பு | - |
ஊர் | யாழ்ப்பாணம் |
வகை | - |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஞானேஸ்வரி ஞானசேகரம் 1935.05.04 யாழ்ப்பாணத்தில் வண்ணார் பண்ணையில் பிறந்தார். தந்தை செல்லையா தாய் நாகம்மா ஆவார். நான்கு சகோதரர்கள் இருக்கின்றார்கள்.
நான் (1940)ல் இந்துக்கல்லூரி கலவன் பாடசாலையில் எனது கல்வியை ஆரம்பித்தேன், அங்கு ஆண்பிள்ளைகளும், பெண்- பிள்ளைகளும் ஒன்றாகப் படித்தோம். இந்துக் கல்லூரியின் மூலையில் ஒரு கறுத்தக்கொழும் பான் மாமரமும், ஒரு கொண்டல் மரமும் அமைந்திருந்தது. அங்கு முறையே முதலாம் இரண்டாம், மூன்றாம் வகுப்புகள் இருந்தன. இங்கு தலமை உபாத்தியாயர், கணபதிப் பிள்ள சோமாஸ்கந்தர்,இரத்தின - சபாபதி, பெரியக்கா சின்னக்கா என்ற பலர் படிப்பித்தார்கள். அங்கு முறையே பயின்று அதே இந்துக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் ஒரு மூலையில் நாலாம் வகுப்பைத் தொடர்ந் தோம். பின் Hindu Board) னால் ஒரு மகளிர் கல்லூரி ஒன்று நிர்மாணிக்கப்பட்டது அங்கு சில நாட்கள் மட்டும் கல்வியைத் தொடர்ந்தோம் பின் விளையாட்டு மைதானத்துக்கு முன் கஸ்தூரியார் வீதியிலுள்ள திரு பொண்னுச்சாமி என்பவர்களினது நாற்சார வீட்டில் மகளிர் கல்லூரியை தொடர்ந்தோம் அப்போது எங்கள் கல்லூரி அதிபர் காயத்திரி பொன்னுத்துரை அவர் மிகவும் நல்ல நிர்வாகத் திறமையுடையவர். அதன் பின் பிறவுண் வீதியைச் சேர்ந்த திரு சிவகுருநாதர் திருமதி- விசாலாட்சி அவர்கள் மனமுவந்து அன்பளிப்பாக நடுத்தோட்ட இராஜ வரோதயப்பிள்ளையார் கோவிலுடன் பாடசாலைக்கு அந்தப் பெரிய பனை வளவுடன் தந்து உதவினார்கள். அதன் பின் அங்கு பனங் குற்றியினால் கொட்டில்கள் போடப்பட்டு ஓலை யால் வேயப்பெற்று மணல் பரப்பி சிறு, சிறு வகுப்புகளாக கதிரை மேசை போடப்பட்டு. இந்து மகளிர் கல்லூரி எனப் பெயர் பெற்றது.
நான் (1943ம்) ஆண்டு யாழ் இந்து மகளிர் கல்லூரி ஆரம்பித்த காலத்தில் முதன், முதலில் அன்றைய நான்/ பெண்பிள்ளைகள் மாணவிகள் எல்லோரும் அணிவகுப்புடன் கல்லூரிக்கு அனுப்பிவைக்கப்பட்டார்கள் அதில், (Flag) கொடியுடன் சென்றவர்களில் நானும் ஒருத்தி என்று பெருமையுடன் சொல் லிக்கொள்ள விரும்புகிறேன். அன்று தான் அங்கு முதன் முதலில் கால் பதித்தோம். அது ஒரு பொன் நாள் என்று சொன்னால் மிகையாகாது. அங்கு கொட்டில் வகுப்பில் கல்வி பயின்றோம் நல்ல அதிபரும் திருமதி மொற்வாணி (Molikani) ஒரு ஆங்கிலப் பெண்மணி திருமதி ( Achchaya அச்சயா என்று சிலர் சிலர் வந்து போனார்கள்