ஆளுமை: செல்வி பத்மா இராமநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் பத்மா
தந்தை இராமநாதன்
தாய் பறுவதவர்த்தினி
பிறப்பு 1926.06.24
இறப்பு 1986.04.05
ஊர் யாழ்ப்பாணம்
வகை ஆசிரியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

செல்வி பத்மா இராமநாதன் அவர்கள் 1926.06.24ம் ஆண்டு பிறந்தார். இவர் சாதாரண ஆசிரியராகவும் உதவி அதிபராகவும் முப்பத்தைந்து வருர்டம் யாழ் இந்து மகளிர் கல்லூரியில் சேவை செய்தார். இவர் ஆரம்பக் கல்வியை கட்டுடை சைவ வித்தியாசாலையில் கல்வி கற்றார். இவர் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கு அருகாமையிலேயே தன்னுடைய இருப்பிடத்தை அமைத்துக் கொண்டார். யாழ் இந்து மகளிர் கல்லூரியின் பொற்காலம் ஒன்றை நிர்மாணம் செய்ய அவதாரம் பெற்றவரே இவராவார். இவர் ஆசிரியராக, துணை அதிபராக , அதிபராக யாழ் இந்து மகளிர் கல்லூரியில் பணியாற்றினார். இவர் 1986 ம் ஆண்டு ஜூன் மாதம் 24 ஆம் திகதி ஒய்வு பெற்றார். இவர் முப்பத்து ஆறு ஆண்டுகள் கல்லூரியில் நேரிடையாகப் பணியாற்றிய செல்வி இராமநாதன் ஒய்வு பெற்ற பின்பும் கல்லூரியில் அதிக அக்கறை காட்டியவர். கல்லூரி அபிவிருத்திச் சங்க உறுப்பினரின் நெருக்குதல் மூலம் கல்லூரிக்கு ஒரு நிரந்தர அதிபரைப் பெற்றுவிட வேண்டும் என்ற நோக்கில் அவர் இது சம்பந்தமாக தேடினார்.