ஆளுமை: சுதாகரன், சண்முகநாதன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் சண்முகநாதன் சுதாகரன்
தந்தை சண்முகநாதன்
தாய் பவளரத்தினம்
பிறப்பு 1962.10.01
ஊர் திருக்கோணமலை
வகை கல்வி செயற்பாட்டாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


இவர் திருகோணமலை உயர்தர கல்வி வரலாற்றில் மறக்கமுடியாத ஒரு இடத்தை கொண்ட கல்வி செயற்பாட்டாளர் ஆவார். உதவிக் கல்விப் பணிப்பாளர் (விஞ்ஞானம்) உட்பட ஆசிரியர் என பல வடிவங்களில் திருகோணமலை மாணவர்களுடன் நெருங்கி செயற்பட்ட ஒருவர் இவர். இவர் 01.10.1962 அன்று சண்முகநாதன், பவளரத்தினம் தம்பதியினருக்கு ஓர் ஆண் சகோதரனுக்கும், மூன்று பெண் சகோதரிகளுக்கும் இளையவனாக உரும்பிராய் யாழ்பாணத்தில் பிறந்து, பன்குளம் ஔவை நகர் அரசினர் வித்தியாலயம், திருகோணமலையில் ஆரம்பக் கல்வியைப் பயின்று, இந்துக்கல்லூரி திருகோணமலையில் இடைநிலை, உயர் கல்வியைக் கற்று யாழ்பாணப் பல்கலைக்கழகத்தில் 1984 இல் பௌதிக விஞ்ஞான பட்டதாரியாக வெளியேறினார்.

பட்டம் பெற்ற அன்றிலிருந்து தனது சேவையை ஆரம்பிக்கும் நிமித்தம் தி/ஸ்ரீ சன்முக இந்து மகளில் கல்லூரி, தி/புனித சூசையப்பர் கல்லூரி ஆகிய இரண்டிலும் பகுதி நேர பௌதிகவியல் ஆசிரியராக கடமையாற்றி 05.08.1964 இல் தி/புனித சூசையப்பர் கல்லூரியில் அரச நியமனம் பெற்று அன்றிலிருந்து ஆசிரியராகவும், பகுதித்தலைவராகவும், உதவி அதிபர் எனும் பல பரிமானங்களில் எங்களது சமூகத்திற்கான கடமைகளை நேர்த்தியாகச் செய்ததிற்கு அமைய 07.07.2005 இல் உதவிக்கல்வி பணிப்பார் (விஞ்ஞானம்), திருமலை வலயம் எனும் அந்தஸ்த்தை பெற்றார்.

அதற்கு அமை இன்றுவரை நேர்கொண்ட பார்வையுடன் உதவிக் கல்விப்பணிப்பாளராக இருந்தும், ஆசிரியர் எனும் பொறுப்பை என்றும் கைநழுவ விடாமல் விஞ்ஞான கல்வித் தாவட்டத்தை ஸ்தாபித்து சக ஆசிரியர்களை ஒரு குடைக்குள் கொண்டுவந்தார். கல்வி சமூகத்திற்கு 193 இலிருந்து பௌதிகப் பாட விடைத்தாள் மதிப்பீட்டு அனுபவத்துடன் சொல்லில் அடங்காத பல சேவைகளை ஆற்றி வருகின்றார்.