ஆளுமை: இராஜரட்ணம், இராமையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் இராஜரட்ணம்
தந்தை இராமையா
தாய் யோகாம்பாள்
பிறப்பு 1942.07.24
ஊர் செம்பியன்பற்று தெற்கு
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

இராமையா இராஜரட்ணம் கண்டி தெல்தோட்ட எனும் இடத்தில் பிறந்தார்(1942). யூனியன் பாடசாலையில் கல்வி கற்றார். 1985 ஆம் ஆண்டில் ஜெயபுரம் பகுதியில் குடியேறினார். சிறப்பாக பாடக்கூடியவர்.பாடல்களை இயற்றியும், வேறு பாடல்களை அதே மெட்டில் மாற்றி பஜனைகளை இயற்றிப் பாடி வந்தார். தற்போது இவர் புள்ளிகளை இணைத்து புதிய வகையில் கோலங்களை வரைந்து வருகிறார். கிராமஅபிவிருத்திச்சங்கத்தின் உபதலைவராகவும், செயலாளராகவும், பொருளாளராகவும், தலைவராகவும், பதவி வகித்துள்ளார். கிராம மட்ட அமைப்புக்களின் சம்மேளனத் தலைவராக இருந்தார். கலைஞர் சுவதம் விருது பெற்றுள்ளார்.