ஆளுமை: அபிராமி கைலாசபிள்ளை

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் அபிராமி
தந்தை சுப்பிரமணியம்
தாய் பறுவதவர்த்தினி
பிறப்பு 1943.06.14
இறப்பு -
ஊர் கொழும்பு.
வகை -
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் 1943.06.14 ஆண்டு யாழ்ப்பாணத்தில் பிறந்து தற்பொழுது கொழும்பில் வசிக்கின்றார். இவரது தந்தை சுப்பிரமணியம் , தாய் பறுவதவர்த்தினி ஆவார். இவர் 1954 ஆம் ஆண்டு நான்காம் வகுப்பிலிருந்து உயர்தரம் வரைக்கும் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி பயின்றார். யாழ் இந்து மகளிர் கல்லூரி இவர் பிறந்த ஆண்டிலேயே ஆரம்பிக்கப்பட்டது . இவர் கொழும்பு பழைய மாணவர் சங்கத்தில் 1993 ஆம் ஆண்டிலிருந்து இன்றுவரை சேவையாற்றி வருகின்றார். வறுமைக் கோட்டில் உள்ள மாணவர்களுக்கு உதவி செய்தார். ஐந்து பழைய மாணவர் சங்கங்கள் எல்லாம் சேர்ந்து யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் 3 மாடிக் கட்டடடங்கள் கட்டிக் கொடுக்கப்பட்டது. யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் கல்விகள் எல்லாப் பாடங்களிலும் கற்பிக்கப்ப்ட்டதாகவும், இப்பாடசாலையின் ஆடைகள் பாவடை சட்டை தாவணி உடுத்து பாடசாலைக்கு சென்றார்கள் எனவும் கூறப்பட்டது.

இவர் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியில் கல்வி கற்கும் காலத்தில் அருந்ததி இல்லத்தில் இருக்கும் போது அவ் இல்லத்தின் தலைவராக இருந்தார். தலைவராக இருக்கும் போது முதலாவதாக வருவதற்கு பெரும் பாடுபாட்டார்.

யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் விடுதிகளில் தங்கி கல்வி கற்று வந்தார்கள். பண்டாரவளை , கொழும்பு போன்ற இடங்களில் இருந்து விடுதிகளில் தங்கினார்கள். யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியானது ஆரம்பிக்கும் நேரம் 8.30 ஆகவும் 2.30 க்கு முடியும் .

அபிராமி கைலாசபிள்ளை அவர்கள் யாழ் இந்து மகளிர் கல்லூரிக்கு நடந்து சென்றே கல்வியினை பயின்ரார். பழையமாணவர் சங்கம் மூலமாக யாழ் நாதம் என்னும் இதழ்கள் வெளியிடப்பட்டது. கொழும்பு பழைய சங்கத்தி இவர் நீண்ட காலமாக சேவை ஆற்றி வருகின்றார்.