ஆளுமை:ஹுஸீனா, ஹுஸைன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக

{{ஆளுமை’ பெயர்=ஹுஸீனா| தந்தை=ஹுஸைன்| தாய்=ஜெனீஹா| பிறப்பு=1988.08.27| இறப்பு=| ஊர்=காலி கிந்தோட்டை| வகை=ஊடகவியலாளர்| புனைபெயர்=| }}

'ஹுஸீனா, ஹுஸைன் காலி கிந்தோட்டையில் பிறந்த ஊடகவியலாளர். இவரது தந்தை ஹுஸைன்; தாய் ஜெனீஹா. காலி கிந்தோட்டை சாஹிரா தேசிய பாடசாலையில் ஆரம்பக் கல்வியையும் கொழும்பு பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியில் இடைநிலைக கல்வியையும் கற்றார். பாத்திமா முஸ்லிம் மகளிர் கல்லூரியின் பழைய மாணவிகள் சங்க தலைவியாகவும் சில காலம் செயற்பட்டுள்ளார். பத்திரிகைத்துறை மற்றும் ஆங்கில மொழியில் டிப்ளோமா கற்கை நெறியை பூர்த்தி செய்த ஹுஸ்னா 2009ஆம் ஆண்டு தினக்குரல் பத்திரிகையில் இணைந்து கொண்டார்.

தினக்குரல் நாளிதழிழலும் தினக்குரல் வார இதழிலும் பல்வேறு கட்டுரைகளை தொடர்ந்து எழுதி வரும் இவர் தினக்குரல் நாளிதழில் திங்கட்கிழமை தோறும் வெளிவரும் நலம் தானா? என்ற விசேட மருத்துவ இதழுக்கு பொறுப்பாசிரியராகவும் தினக்குரல் பத்திரிகையின் உதவி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

விருதுகள்

சிறந்த சமூக அபிவிருத்தி செய்தியாளருக்கான சுப்பிரமணியம் செட்டியார் விருது – 2000 இலங்கை பத்திரிகை ஸ்தாபனம் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம்.

சிறந்த மருத்துவ கட்டுரைக்கான விருது – 2011ஆம் ஆண்டு இலங்கை மருத்துவ சங்கம்.

சிறந்த சூழலியல் செய்தியாளருக்கான விருது – 2011ஆம் ஆண்டு இலங்கை பத்திரிகை ஸ்தாபனமும் இலங்கை பத்திரிகை ஆசிரியர் சங்கம்.

சிறந்த மருத்துவ கட்டுரைக்கான விருது – 2012 இலங்கை மருத்துவ சங்கம்.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஹுஸீனா,_ஹுஸைன்&oldid=349574" இருந்து மீள்விக்கப்பட்டது