ஆளுமை:ஹிமாலினி, சுகந்தன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஹிமாலினி
தந்தை அமிர்தலிங்கம்
தாய் நிர்மலாதேவி
பிறப்பு 1984.12.11
ஊர் யாழ்ப்பாணம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஹிமாலினி, சுகந்தன் (1984.12.11) யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த கலைஞர். இவரது தந்தை அமிர்தலிங்கம்; தாய் நிர்மலாதேவி. தனது ஆரம்பக் கல்வியை யா/உடுவில் மகளிர் கல்லூரியிலும் இடைநிலைக் கல்வியை வவு/இறம்பைக்குளம் மகளிர் கல்லூரியிலும் உயர்தரக் கல்வியை யா/மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும் கற்றார். யாழ்ப்பாணம் நுண்கலைப்பீடத்தின் கர்நாடக சங்கீதத்தினை சிறப்புப் பாடமாக தெரிவு செய்து நுண்கலைமாணிப் பட்டத்தினைப் பெற்றுள்ளார். வட இலங்கை சங்கீத சபையில் சங்கீதத்தில் ஐந்தாம் தரத்திலும் பண்ணிசையில் ஆசிரியர் தரத்திலும் சித்திபெற்று கலாவித்தகர் பட்டத்தினையும் பெற்றுள்ளார். சிறு வயதிலிருந்தே ஆலயங்களில் பஜனை, பஞ்சபுராணம் ஒதுதல், சிறுசிறு கச்சேரிகள் ஆகியவற்றில் பங்குபற்றி வந்தாலும் முறையான வழிகாட்டல் கிடைக்கப்பெறாததால் இசைத்துறையில் சீராக வளர்த்துக்கொள்ள முடியாமல் இருந்தது. இவரது 16 வயதில் ஓர் ஆலயத்தில் அம்மன் கீர்த்தனை ஒன்றை பாடி முடித்து மேடையில் இருந்து இறங்கி வரும் பொழுது தற்பொழுது அவரது குருவாக இருக்கும் செல்வி சந்திரிக்கா கணேஸ்பரன் அவரை அழைத்து தனது சிஷ்யையாக்கிக்கொண்டார். இவர் இசைத்துறையைச் சார்ந்தவராக இருந்தாலும் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வருகிறார். பல ஆலயங்களின் மகோற்சவங்களிலும் தேர்த்திருவிழாக்களிலும் இசை, பண்ணிசைக் கச்சேரிகளை நடத்தி வருகிறார். இந்துசமய கலாசார திணைக்களத்தில் வளவாளராகப் பதிவு செய்துள்ளார். இதன் பிரகாரம் இசை, சமயம் சார் போட்டிகளிற்கு நடுவராகவும் கருத்தரங்குகளிற்கு சென்று வருகிறார். தாவடி குழந்தைசிட்டி ஸ்ரீ காமாட்சி அம்பாள் புகழ்மாலை, வண்ணை கேசாவில் பிள்ளையார் புகழ்மாலை, சுதுமலை புவனேஸ்வரி அம்பாள் அலங்கார நாயகியே ஆகிய இறுவட்டுக்களை வெளியிட்டுள்ளார்.