ஆளுமை:ஸ்ரீரங்கராணி, இரா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸ்ரீரங்கராணி
பிறப்பு 1946.11.11
ஊர் மண்டைதீவு
வகை கலைஞர்

ஸ்ரீரங்கராணி, இராமச்சந்திரர் மண்டைதீவில் பிறந்த கலைஞர். இசைத்துறையில் சங்கீதரத்தினம் டிப்ளோமா பட்டத்தினை பெற்றுள்ள சங்கீத ஆசிரியராவார். 1990-1995 வரை இவர் சேவைக்கால ஆசிரிய ஆலோசகராகவும் 1999ஆம் தொடக்கம் அழகியற் பாட உதவி பணிப்பாளராகவும் கடமையாற்றியுள்ளார்.

இசைக்கச்சேரிகளையும் பண்ணிசைகளையும் ஈழத்தின் தலைசிறந்த ஆலயங்கள் பலவற்றில் வழங்கியிருக்கின்றார். அத்துடன் வட இலங்கை சங்கீத சபை, கோப்பாய் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை, க.பொ.த உயர்தரச் செய்முறைப் பரீட்சை முதலான சங்கீதப் பரீட்சைகளுக்கு பிரதம பரீட்சகராக கடமையாற்றியுள்ளார்.


விருது

வேலணைப் பிரதேச கலாசாரப் பேரவை கலைவாருதி விருது