ஆளுமை:ஸனீரா, காலிதீன்
பெயர் | ஸனீரா |
தந்தை | காலிதீன் |
தாய் | உம்மு ஹஸீனா |
பிறப்பு | |
ஊர் | களுத்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
ஸனீரா, காலிதீன் களுத்துறையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை காலிதீன்; தாய் உம்மு ஹஸீனா. இவர் தர்கா நகர் முஸ்லிம் பெண்கள் மத்திய கல்லூரியில் கல்வி கற்றார். ஆசிரியரான இவர் களுத்துறை முஸ்லிம் கல்லூரியில் ஆசிரியராகக் கடமையாற்றினார். கதம்பம், ஜும்ஆ ஆகிய இரு சிறுகதைககளும் பத்திரிகைகளில் வெளிவந்ததன் ஊடாக இலக்கிய உலகிற்கு பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். கவிதை, சிறுகதை, கட்டுரை, நாவல் எழுதுதல் என பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இவரின் ஆக்கங்கள் தினகரன், வீரகேசரி ஆகிய பத்திரிகைகளிலும் கடல் என்ற சஞ்சிகையிலும் பிரசுரமாகியுள்ளது. களுத்துறை முஸ்லிம் கல்லூரியின் துறை எனும் சஞ்சிகையை வெளியிட்டதன் ஊடாக மாணவர்களை இலக்கிய உலகிற்குள் பிரவேசிக்க காரணமாக இருந்துள்ளார். இவரது முதல் நாவல் ஒரு தீபம் தீயாகிறது 1990 ஆம் ஆண்டு வெளியானது. இரண்டாவது நாவல் அலைகள் தேடும் கரை 2009ஆம் ஆண்டு வெளியாகி கொடகே சாகித்திய விருதும் கிடைத்துள்ளது.
விருதுகள்
அலைகள் தேடும் கரை நாவலுக்கு 2009ஆம் ஆண்டு கொடகே சாகித்திய விருது.
ஈழத்து இலக்கியத்திற்கு இவர் ஆற்றிய சேவையை பாராட்டி 2002ஆம் ஆண்டு உலக இஸ்லாமிய தமிழ் இலக்கிய மாநாட்டில் சான்றிதழ் வழங்கப்பட்டது.
அலைகள் தேடும் கரை 2010ஆம் ஆண்டு திறமையான ஆக்கத்திற்கான விருது.
படைப்புகள்
- அலைகள் தேடும் கரை
- ஒரு தீபம் தீயாகிறது
வெளி இணைப்புக்கள்