ஆளுமை:ஸனீபா, ஸனீர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸனீபா
தந்தை ஸனீர் இப்ராஹிம்
தாய் யஸ்மின்
பிறப்பு
ஊர் அரும்பொல
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸனீபா, ஸனீர் கண்டி அரம்பொலவில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஸனீர் இப்ராஹிம்; தாய் யஸ்மின். ஸனீபா ஸனீர் கண்டி பதியுத்தீன் மஹ்மூத் கல்லூரியில் கல்வி கற்றார். இஸ்திகார் முஹம்மத் இவரின் கணவராவார். மூன்று பிள்ளைகளின் தாயுமாவார். சிங்களம், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலுமே இலக்கியம் படைத்து வருகிறார் ஸனீபா. தனது ஒன்பதாவது வயதில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். பாடசாலைக் காலத்திலேயே தனது முதலாவது நாவலை எழுதி முடித்துள்ள இவரின் ஆக்கங்கள் பத்திரிகைகளிலும் வெளியாகியுள்ளன. புனைக்கதைகளை எழுதுவதில் மிகவும் ஆர்வமுடையவர்.

பூதின்ன இடதென்ன (மலர்வதற்கு இடம் தாருங்கள்) எனும் இவரது முதலாவது சிங்கள மொழியிலான நூல் 2006ஆம் ஆண்டு வெளியிட்டார். இந்நூல் கருக்கலைப்பு, வீட்டுக்குள் இடம்பெறும் அத்துமீறல்கள், துஷ்பிரயோகங்கள் போன்றவற்றை பேசியது. செனஹசே ரித்மய (அன்பின் தாளம்) சிங்கள நூல் முஸ்லிம் குடும்பத்தினரை பற்றிய கதை 2009ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. Nothing but love (அன்பையன்றி வெறொன்றுமில்லை) எனும் ஆங்கில நூல் 2016ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. I am fasting this Ramazan (நான் இந்த ரமழானின் நோன்பு நோற்றிருக்கிறேன்) என்ற சிறுவர் நூலையும் Unlocking on another ஆகிய இரு ஆங்கில நூலையும் 2017ஆம் ஆண்டு வெளியிட்டார். In the Land of Strangers என்ற நூல் Amazon.com மில் 2018ஆம் ஆண்டு வெளியானது. இவர் உள்ள நாட்டு வெளிநாட்டு வலை தளங்களிலும் எழுதி வருகிறார்.

விருதுகள்

Islamic Writers Alliance (USA) 2011ஆம் ஆண்டில் சிறந்த ஆங்கில சிறுகதைக்கான விருது வழங்கியது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:ஸனீபா,_ஸனீர்&oldid=333852" இருந்து மீள்விக்கப்பட்டது