ஆளுமை:ஸகியா சித்திக் பரீத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஸகியா சித்திக் பரீத்
தந்தை -
தாய் -
பிறப்பு -
இறப்பு -
ஊர் மாவனல்ல
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஸகியா சித்திக் பரீத் மாவனல்ல தெல்கஹகொடையில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழக கலைமாணி பட்டதாரியான எழுத்தாளர், கொழும்பு பல்கலைகழக்கத்தில் டிப்ளோமா பட்டப்பின் படிப்பைப் பூர்த்தி செய்துள்ளார். பாடசாலைக் காலங்களிலேயே எழுத்துத்துறையில் ஈடுபாடு கொண்டவராக இவர் காணப்பட்டுள்ளார். வெண்ணிலாவே என்று தலைப்பிட்டு சிறுவர் பாடல் ஒன்றை முதல் முதலாக எழுதி அது தினகரன் பத்திரிகையின் சிறுவர் பகுதியில் பிரசுரமானதே இவரின் முதலாவது எழுத்துத்துறை பிரவேசத்திற்கு காரணமென்கிறார் எழுத்தாளர் ஸகியா சித்திக் பரீத். பாடசாலைக் காலத்தில் மாணவர் மன்றங்களில் பாடுவது கதை சொல்லும் போட்டிகளில் கலந்து கொள்வது போன்றவற்றில் பெரும் ஈடுபாடு கொண்ட இவர் உயன்வத்த மகாவித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியை கற்கும் போதே தேனருவி எனும் கையெழுத்து சிற்றிதழை எழுதியுள்ளார். 1985ஆம் ஆண்டு வானொலி நிகழ்ச்சிகளுக்கு பிரதிகள் எழுதி அவற்றில் பங்குபற்றியும் வந்துள்ளார். இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில் மாதர் மஜ்லிஸ் பகுதியில் பல வருடங்களாக பிரதிகள் எழுதியுள்ளார். ஸாஹிராவை உருவாக்கிய உத்தமர்கள் என்ற ஆவண நூலே இவரின் முதலாவது நூலாகும். இந் நூல் சிங்களம், ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளிவந்துள்ளது. இதனை எழுத்தாளரே எழுதியுள்ளமை விசேட அம்சமாகும். எதிர்காலத்தில் பெண்கள் வலுவூட்டல் பணிகளோடு சிறுவர் இலக்கியம் தொடர்பாக எழுத விரும்புவதாக தெரிவிக்கிறார் எழுத்தாளர்.

விருதுகள்

2006ஆம் ஆண்டு கொழும்பு மருதானை ஸாஹிராக் கல்லூரி ஆளுனர் சபையின் நல்லாசிரியர் விருது.

இளம் முஸ்லிம் மாதர் சங்கத்தில் 30 வருட சேவையை பாராட்டி அச்சங்கம் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவித்தமை. 2011ஆம் ஆண்டு இலங்கை அரசாங்கத்தால் கலைஞர்களுக்கான கலாபூஷண விருது கலாசாரா அமைச்சால் வழங்கப்பட்டது.


படைப்புகள்

  • விடியலின் விழுதுகள் மாடும் (சிறுகதை தொகுப்பு)
  • இதயத்தின் ஓசைகள் கவிதைத் தொகுப்பு
  • முதிசம் பொன்மொழிகள் அடங்கிய தொகுப்பு

வளங்கள்

  • நூலக எண்: 11674 பக்கங்கள் 4-9