ஆளுமை:ஷமீலா, யூசுப் அலி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ஷமீலா
தந்தை யுசுப் அலி
தாய் அமீனா அஹ்மத்
பிறப்பு
ஊர் கண்டி
வகை எழுத்தாளர், கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ஷமீலா, யூசுப் அலி மாவனல்லையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை எம்.டீ.எல்.யூசுப் அலி; தாய் அமீனா அஹ்மத். சமூகவியல்துறை, ஊடகத்துறை ஆகியவற்றில் முதுமாணிப்பட்டம் பெற்றவர். ஊடகம், மக்கள் தொடர்பு, பெண்கள் வலுவூட்டல், சிறுவர் ஆரம்பக் கல்வி, ஊடகத்துறை, படைப்பிலக்கியம், இளைஞர் வலுவூட்டல், அவசரவேளைகளில் மனோதத்துவ தலையீடு, சமூக முன்னேற்றம், ஆய்வு, மின் வழி கற்றல், வாய் மூல வரலாற்று ஒலிப்பதிவு மற்றும் உயிரோட்டமான எழுத்து மற்றும் மொழிபெயர்ப்பு பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ளார். பேர்மிங்ஹம் ஐக்கிய ராஜ்ஜியத்தில் Fem Aisa Magazine ஃபெம் ஏசிய என்ற சஞ்சிகையின் பிரதம ஆசிரியராகவும் DESlblitz Web Magazine இணைய சஞ்சிகையின் கலை கலாசார பொறுப்பாசிரியராகவும் உள்ளார். தேசம் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் மற்றும் பொறுப்பாசிரியராகவும் ஜெஸீமா இருந்துள்ளார். குவெஸ்ட் The Quest: An Anthology of poems ஆங்கில (கவிதைத் தொகுப்பு), இன முரண்பாட்டிற்கு இராணுவ தீர்வு உண்டு எப்போதுமே முடிவுறாத இலங்கை யுத்தம், மாவனல்லையில் பெண்களும் முஸ்லிம் திருமண சடங்குகளும் ஒரு பால்நிலை முன்னோக்கு, இனிப்பு சாப்பிடாத எறும்பு – (சிறுவர் நூல்), மின்ஹாவின் குட்டி இரகசியம் – (சிறுவர் நூல்), நீண்ட இரவு – சிறுகதை ஆகிய ஆறு நூல்களை வெளியிட்டுள்ளார். அத்தோடு பல ஆய்வுகளையும் முற்கொண்டுள்ளார். தீர்வு எட்டுவதில் முஸ்லிம் பெண்கள் பங்கு மாவனல்லை நகரில் செய்யப்பட்ட ஆய்வு சர்வதேச ஆய்வு அமர்வுகளுக்காக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் 2016ஆம் ஆண்டு ஆய்வு சஞ்சிகையில் பிரசுரிக்கப்பட்டது.

விருதுகள்

கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைப் பிரிவின் 2008 ஆம் ஆண்டு சிறந்த செயற்பாட்டாளருக்கான தங்கப்பதக்கம். கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைப் பிரிவின் தமிழ்ப் பிரிவின் 2008ஆம் ஆண்டு சிறந்த செயற்பாட்டாளருக்கான தங்கப் பதக்கம். கொழும்பு பல்கலைக்கழக ஊடகத்துறைப் பிரிவின் தமிழ்ப் பிரிவின் 2008ஆம் ஆண்டு ஊடகவியல் வரலாறுக்கான தங்கப் பதக்கம்.


வெளி இணைப்புக்கள்