ஆளுமை:வேலாயுதபிள்ளை, மயில்வாகனம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலாயுதபிள்ளை
தந்தை மயில்வாகனம்
தாய் -
பிறப்பு 1955.10.04
ஊர் கிளிநொச்சி
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலாயுதபிள்ளை, மயில்வாகனம் (1955.10.04 -) கிளிநொச்சி கலவெட்டித்திடல், புளியம்பொக்கணையை சேர்ந்த எழுத்தாளர். இவரின் தந்தை மயில்வாகனம். இவர் தனது ஆரம்பக்கல்வியை கிளி/கலவெட்டித்திடல் நாகேஸ்வரா வித்தியாலயத்திலும் உயர் கல்வியை யாழ்ப்பாணம் சாவகச்சேரி இந்துக்கல்லூரியிலும் கற்றவர்.

இவர் ஆரம்பத்தில் கமநல சேவை நிலையத்தில் எழுதுவினைஞராக கடமையாற்றி பின் உப தபால் அதிபராக புளியம்பொக்கணையில் கடமையாற்றி ஓய்வுப் பெற்றுள்ளார். இவர் "ஐங்கரதாசன் ,"மயில்குஞ்சு", "மயில் வேலாயுதம்பிள்ளை" போன்ற கவிதைகளை எழுதியுள்ளார்.

2013 ஆம் ஆண்டில் இவரது கலை, எழுத்தாக்கப்பணிகளை கௌரவிக்கும் முகமாக கண்டாவளை பிரதேச கலாசார பேரவையும் பிரதேச செயலகமும் இணைந்து பிரதேச கலாசார விழாவில் "கலை ஒளி" விருது வழங்கி இவரது சேவையை மதிப்பளித்தமை குறிப்பிடத்தக்கது.


வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 26-27