ஆளுமை:வேலன் விசுவலிங்கம், அன்னலிங்கம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வேலன் விசுவலிங்கம்
தந்தை அன்னலிங்கம்
தாய் கனகம்மா
பிறப்பு 1958.01.14
ஊர் கிளிநொச்சி, ஞானிமடம்
வகை கூத்துக் கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வேலன் விசுவலிங்கம் (1958.01.14 - ) கிளிநொச்சி, ஞானிமடத்தைச் பிறப்பிடமாகக் கொண்ட கூத்து கலைஞர். இவரது தந்தை அன்னலிங்கம்; தாய் கனகம்மா. இவர் அண்ணாவி துரைசாமி காலத்தைச் சேர்ந்தவர் என்றும் தம்பையா அண்ணாவிடம் கூத்துக்களை கற்றுக்கொண்டது உடன் துரைசாமி அண்ணாவுடன் இணைந்து செயற்பட்டு வந்ததாக கூறப்படுகின்றது. தனது பாடசாலைக் காலத்தில் கலைத் துறையில் அதிக ஈடுபாடு கொண்டவராகவும் காணப்பட்டார் துரைசாமி அண்ணாவியுடன் சேர்ந்து கதைகள் தயாரித்து பழக்கி மேடை ஏற்றிவந்தார். பிற்பட்ட காலத்தில் தானாக நாடகங்களை எழுதுவதுடன் நெறியாள்கையும் செய்தார்.

யாழ்ப்பாணம், கொழும்புத்துறை பகுதியில் காணப்பட்ட இசை நாடகங்களின் கொப்பிகளை பெற்று அரிச்சந்திரா விலாசம், நல்லதங்காள், சத்தியவான் சாவித்திரி, ராமாயணம், ஸ்ரீவள்ளி ,போன்ற நாடகங்களை பழக்கி சாவகச்சேரி,கற்பெலி,கொழும்புத்துறை,கொடிகாமம் கச்சாய் போன்ற இடங்களில் மேடையேற்றினார். இவர் துருவன், கால விருட்சம் போன்ற புராண நாடகங்களில் கொப்பிகளைப் பெற்று தனது இசையினையும், இசை மொட்டுகளும் உட்புகுத்தி எழுதினார். இவருடைய துருவன் நாடகத்தில் துருவன் ஆட்கள் பாடும் பாடலின் ஒரு வரி இன்னும் சிலரின் நினைவில் உள்ளது.

இந்த அரசும் சிம்மாசனமும் எங்கள் துருவனுக்கு சொந்தமடி ஏனோ அரியரா இந்த வீண் வாது …….

இவருடைய நாடக செல்வாக்கின் ஒரு சுவாரசியமான அனுபவத்தை பகிர்ந்து கொண்டார் ஓய்வுபெற்ற அதிபர் குலசேகரம் அவர்கள் சித்தன் குறிச்சியில் 1955 ஆம் ஆண்டு அண்ணாவி விசுவலிங்கம் அவர்களின் காலவரிசை நாடகம் சேதுகாவல்பிட்டியில் போடப்பட்டது. நெல் அறுவடைக்குப் பின் ஓய்வு காலத்தில் கிராமங்கள் தோறும் கூத்துக்கள் தான். அந்த வரிசையில்தான் இது சவுந்தர் ராஜன் என்பவர் 1955 ஆம் ஆண்டு பிறந்து மூன்றாம் நாள் இந்த நாடகம் அரங்கேற்றப்பட்டது. இதில் சௌந்தரராஜன் உடைய உறவினர்கள் அதிகமாக நடித்தமையால் பிறந்து மூன்று நாட்களாகிய குழந்தை சவுந்தரராஜனை காலவர் என்று அழைக்கிறார்கள். காலவர் எனும் பாத்திரம் காலவரிசையில் முக்கியம் ஆக இருந்தது இன்றைக்கு காலவர் என்றால் தான் மக்களுக்கு தெரியுமே தவிர சௌந்தரராஜன் என்ற பெயரை யாரும் அறிய மாட்டார்கள்.