ஆளுமை:வில்லரசன், சர்வேஸ்வரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வில்லரசன்
தந்தை சர்வேஷ்வரன்
தாய் கலைச்செல்வி
பிறப்பு 1998.04.02
ஊர் கிளிநொச்சி, பிரமந்தனாறு
வகை பேச்சாளர், இலக்கிய விமர்சகர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வில்லரசன்,சர்வேஷ்வரன் (1998.04.02 -) கிளிநொச்சி, பிரமந்தனாறு கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட பேச்சாளர், இலக்கிய விமர்சகர். இவரது தந்தை சர்வேஷ்வரன்; தாய் கலைச்செல்வி. இவர் பிரமந்தனாறு மகாவித்தியாலயத்தி ல் ஆரம்பக் கல்வியையும், கிளிநொச்சி இந்து கல்லூரியில் இடைநிலை மற்றும் உயர் கல்வியையும் கற்றதோடு தற்போது பேராதனை பல்கலைக் கழகத்தில் தமிழ்ச் சிறப்பு கற்கை நெறியில் ஈடுபடுகிறார்.

கல்லூரி காலத்தில் மாணவர் பாராளுமன்றத்தில் பிரதமர் ஆகவும் மாணவ தலைவராகவும் செயற்ப்பட்ட இவர் 2017 ஆம் ஆண்டு கா.பொ.த. உயர்தர பரீட்சையில் கலைப்பிரிவின் ஊடக மாவட்ட நிலையில் முதல் இடத்தை பெற்று பேராதனைப் பல்கலைக்கழகத்திற்கு தேர்வானார்.

பாடசாலை மற்றும் பல்கலைக்கழக விவாத அணிகளின் தலைமை பேச்சாளராகவும் செயற்பட்டார். 2019ஆம் ஆண்டு பேராதனை தமிழ் சங்க பீட பிரதிநிதியாக தேர்வு செய்யப்பட்ட இவர் 2020ஆம் ஆண்டு நடைபெற்ற பேசு தமிழா பேசு சர்வதேச பேச்சுப் போட்டியில் 3ம் இடத்தைப் பெற்று இலங்கைக்கு பெருமை சேர்த்தார். 2018ஆம் ஆண்டு கம்பன் கழக பேச்சுப் போட்டியில் வெண்கல பதக்கத்தைப் பெற்று கொண்டார். 2019ஆம் ஆண்டு பேராதனை தமிழ் சங்க மாதரே கவிதை போட்டியில் தங்க பதக்கம் பெற்றார். IBC தமிழ், DAN Tv போன்றவற்றில்

பங்கு பற்றி வருகிறார். இவற்றுடன் வலம்புரி, வீரகேசரி முதலான பத்திரிகைகளில் கவிதை, கட்டுரை, எழுத்தாளராகவும் விளங்குகிறார்.