ஆளுமை:வினோத், சிறிசாந்தக்குமார்
பெயர் | வினோத் |
தந்தை | சிறிசாந்தக்குமார் |
தாய் | வாலாம்பிகை |
பிறப்பு | 1986.12.22 |
ஊர் | கிளிநொச்சி, வட்டக்கச்சி |
வகை | கவிஞர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
வினோத், சிறிசாந்தக்குமார் (1986.12.22 - ) யாழ்ப்பாணம், புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும் கிளிநொச்சி வட்டக்கச்சியை வசிப்பிடமாகவும் கொண்ட கவிஞர். இவரது தந்தை சிறிசாந்தக்குமார்; தாய் வாலாம்பிகை. இவர் யாழ்/ பார்வதி வித்தியாலயம், யாழ்/ கொழும்புத்துறை மகா வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளில் ஆரம்பக் கல்வியையும் கிளி/ இராமநாதபுரம் மகாவித்தியாலயம், வட்டக்கச்சி மத்திய கல்லூரி ஆகிய பாடசாலைகளில் இடைநிலைக் கல்வியையும் கற்றுப் பின்னர் மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கலை மாணிப்பட்டமும் தேசிய சமூக அபிவிருத்தி நிறுவனத்தில் உளவளத்துணைக்கான டிப்ளமோ பட்டத்தையும் பெற்றுக் கொண்டார்.
இவர் சட்ட உதவி ஆணைக்குழுவில் பணிபுரிகின்றார். யாழ்ப்பாணக் கல்லூரியில் 2017காலப்பகுதியில் தமிழ் கவியரங்கம் மற்றும் வானொலி கவிதை நிகழ்சிகளில் பங்குபற்றி மற்றும் தொகுத்தும் வந்தார். சக்தி, கனேடிய தமிழ் வானொலிகள், டான் தொலைக்காட்சி, ஐ.பி.சி தமிழ் தொலைக்காட்சி, வதனம், தொலைக்காட்சி, பகலவன் தொலைக்காட்சிகளில் நிகழ்சிகளில் பங்குபற்றி வருகிறார். மற்றும் வதனம் தொலைக்காட்சி தொகுப்பாளராக பணியாற்றியுள்ளார். இவர் பல பக்திப் பாடல்கள் எழுதியுள்ளார். ஏழாலை மற்றும் வட்டக்கச்சி, உதயநகர், இராமநாதபுரம் ஆகிய இடங்களில் உள்ள ஆலயங்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். மற்றும் பல பொதுவான பாடல்களும் எழுதியுள்ளார். இவரது பாடலை தென்னிந்திய பாடகர்களும் பாடியுள்ளனர். கரைச்சி பிரதேச சபையினால் 2020 ஆண்டு கலைச் சேவைக்காக கௌரவிக்கப்பட்டார். இவருக்கு 2020 கவிநிலா மற்றும் கவிவித்தகர் மற்றும் கலாவீபூசண விருதும் கிடைத்துள்ளன.