ஆளுமை:விநாசித்தம்பி, சின்னையா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விநாசித்தம்பி
தந்தை சின்னையா
பிறப்பு 1914.08.30
ஊர் சாவகச்சேரி
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விநாசித்தம்பி, சின்னையா (1914.08.30 - ) யாழ்ப்பாணம், சாவகச்சேரியைச் சேர்ந்த இசைக் கலைஞர். இவரது தந்தை சின்னையா. இசை, ஜோதிடம் போன்ற துறைகளில் ஆர்வம் கொண்ட இவருக்கு, 1945 ஆம் ஆண்டு மட்டக்களப்பில் சங்கீத போதனாசிரியராக முதல் நியமனம் கிடைத்தது.

இவர் விபுலானந்த அடிகளாருடன் இசைக் கச்சேரிகளை நிகழ்த்தியுள்ளதோடு, கதாகாலாட்சேபங்களையும் நடத்தியுள்ளார். இவர் யாழ்ப்பாணத்தில் சங்கீத நிலையங்கள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் 1948 ஆம் ஆண்டு இசை ஆசிரியர் சங்கம் ஒன்றை நிறுவி அதன் தலைவராகக் கடமையாற்றியதுடன் திருக்கேதீச்சர ஆலயத்தின் உற்சவ காலங்களிலும் சிவராத்திரி விழாக்களிலும் புராணம் படித்தும் கதாப்பிரசங்கம் நிகழ்த்தியும் உள்ளார்.

இவரது திறமைக்காகச் சங்கீத பூஷணம், இசையரசு, சிவநெறிச் செல்வன், புராண பௌராணிகர், சைவத் தமிழ்ப் பேரறிஞர் ஆகிய பட்டங்களைப் பெற்றுள்ளார்.

வளங்கள்

  • நூலக எண்: 15444 பக்கங்கள் 79-80