ஆளுமை:விஜயாம்பிகை, இந்திரகுமார்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயாம்பிகை
பிறப்பு
ஊர்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயாம்பிகை, இந்திரகுமார் சிறுவயதிலிருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டு பத்து வருடங்களுக்கு மேலாக தமிழ் நாட்டில் பல்வேறு வகையான நடனங்களை பயின்றவர். தஞ்சாவூர் சோழ ராஜாவின் பரம்பரையில் வந்தவரான ஆஸ்தான நட்டுவானார் எண்கண் ரி.சி.கோவிந்தராஜபிள்ளையாரிடம் பரத நாட்டியக் கலையைப் பயின்றார். நான்கு வருடங்கள் அடையாறு லக்ஷ்மணிடம் உருப்படிகளைக் கற்றார். டாக்டர் சின்னச்சத்தியன், மெட்ராஸ் செல்லப்பா, விபி.தனஞ்செயன் ஆகியோரிடம் குச்சுப்பிடி, கதகளி நடனங்களைக் கற்றவர். இவை மாத்திரமல்லாது உமா என்ற மோகினி ஆசிரியரிடம் மோகினி ஆட்டத்தையும், கமலாபோல் அவர்களிடம் ஒடிசியையும் மினிபுர ரட்ணசேகர அவர்களிடம் இலங்கை கண்டிய நடனத்தையும் கற்றார்.

அடையாறு கே.லக்ஷ்மணன் மாணவியான இவரின் நடன அரங்கேற்றம் சென்னையில் 1970ஆம் ஆண்டு மியூசியம் தியேட்டரில் நடைபெற்றது. அன்றைய தமிழக முதலமைச்சர் கலைஞர் மு.கருணாநிதியின் தலைமையில் இந்நிகழ்வு அரங்கேற்றப்பட்டது, தமிழ்நாட்டில் கலைகளைப் பயின்று இலங்கை திரும்பிய பின் லயனல் வென்ட் தியேட்டரில் ஆதரவில் முதலாவது நாட்டிய நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து பல நாட்டிய நிகழ்ச்சிகளை அரகேற்றிய இவர் 1984ஆம் ஆண்டு புலம்பெயர்ந்து லண்டனில் குடியேறிய இவர் இலங்கையில் தொடங்கிய விஜய நர்த்தனா நடனப்பள்ளியை லண்டனிலும் நடத்தி வருகிறார். லண்டன் மெட்ரோ பொலிற்றன் பொலிசாரும் ஸ்கொட்லண்ட்யார்ட் பொலிசாரும் இணைந்து அவர்களது தலைமையத்தில் நடத்தும் கலைநிகழ்ச்சிகளை ஒன்பது வருடங்களாக தொடர்து தீபாவளி பண்டிகை நாட்களில் மாணவர்களுடன் இணைந்து நடத்தி வருகிறார். இந்தியா, அமெரிக்கா, கனடா, ரஷ்யா, டென்மார்க், இங்கிலாந்து ஆகிய நாடுகளில் நடன நிகழ்ச்சிகளை அரங்கேற்றியுள்ளார். கடந்த 49 ஆண்டுகளாக விஜய நர்த்தனாலயா நடனப் பள்ளியை இயக்கி வருகிறார்.

விருதுகள்

ஜன நர்த்தகி – இலங்கை மக்கள் எழுத்தாளர் முன்னணி

ஆடும் கலாப மயில் – இந்து இளைஞர் மன்றம்

டாக்டர் பட்டம் – அமெரிக்கா

நாட்டிய ரத்னா – கனடா

நடனச் சுடரொளி – கலைஞர் கருணாநிதி

ஆடற்கலை அரசி – மதுரைத் தமிழ்ச் சங்கம்