ஆளுமை:விஜயராணி, அருண்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயராணி, அருண்
தந்தை செல்லத்துரை
பிறப்பு 1954.03.16
இறப்பு 2015.12.13
ஊர் உரும்பராய்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயராணி, அருண் (1954.03.16 - 2015.12.13) யாழ்ப்பாணம், உரும்பராயைச் சேர்ந்த எழுத்தாளர். இவரது தந்தை செல்லத்துரை. இவர் 1972 ஆம் ஆண்டு இந்து மாணவன் என்ற பாடசாலை மலரில் "அவன் வரும்வரை" என்ற தனது முதலாவது சிறுகதையை எழுதினார். இவரது "விசாலாட்சிப்பாட்டி பேசுகின்றாள்" என்ற நகைச்சுவைத்தொடர் இலங்கை வானொலியில் 25 வாரங்கள் ஒலிபரப்பாகியது. இவர் அப்பொழுது கொழும்பில் வாழ்ந்தார்.

இவரது வானொலி நாடகமான தவறுகள் வீட்டில் ஆரம்பிக்கின்றன, ரூபவாஹினி தொலைக்காட்சியில் துணை என்ற நாடகத்தையும் தயாரித்து ஒலிப்பரப்பினார். இவர் அவுஸ்திரேலியாவில் தமிழோசை வானொலி மற்றும் வானமுதம் வானொலி, இன்பத் தமிழ் ஒலி ஆகியவற்றிலும் பல உரைச்சித்திரங்களை வழங்கியிருக்கின்றார்.

இவர் இவரது சேவைக்காக மெல்பன் தமிழ்ச்சங்கத்தினால் 2005 ஆம் ஆண்டுக்கான விருதைப் பெற்றுள்ளார்.

வெளி இணைப்புக்கள்


வளங்கள்

  • நூலக எண்: 2023 பக்கங்கள் 11-18
"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:விஜயராணி,_அருண்&oldid=315814" இருந்து மீள்விக்கப்பட்டது