ஆளுமை:விஜயரட்ண, எட்வின்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயரட்ண
தந்தை எட்வின்
தாய் லீலாவதி
பிறப்பு 1961. 09 .11
இறப்பு -
ஊர் கிரான், மட்டக்களப்பு
வகை சமூக ஆர்வலர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


எட்வின் விஜயரெட்ண (1961.09.11) இவர் மட்டக்களப்பு மாவட்டத்தின் கிரான் எனும் கிராமத்தினைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு-களுதாவளையைப் பூர்வீகமாகவும், மாத்தளை மாவட்டத்தினை வசிப்பிடமாகவும் கொண்டவர். இவரது தந்தை எட்வின், தாய் லீலாவதி. இவரது மனைவி சிவனேஸ்வரி. இவருக்கு ஐந்து சகோதரர்கள் உள்ளனர். ஒரு பெண் பிள்ளையும் உண்டு. இவர் மட்டக்களப்பு கிரான் மகா வித்தியாலயத்தில் ஆரம்பக் கல்வியினையும், மட்டக்களப்பு மத்திய மகா வித்தியாலயத்தில் உயர் கல்வியையும் கற்றுள்ளார். பின்னர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் புவியியல் துறையில் சிறப்புப் பட்டத்தினைப் பெற்றுள்ளார். அத்துடன் 1988 இல் ஆசிரியர் துறையில் இணைந்துள்ளார். அவ்வகையில் கொழும்பு, கண்டி, மாத்தளை ஆகிய மாவட்டங்களில் ஆசிரியப்பணியினை மேற்கொண்டுள்ளார். தனது பல்கலைக்கழக காலத்திலேயே எழுத்து, நாடகம் முதலானவற்றில் ஈடுபாடு கொண்டவராகக் காணப்பட்டுள்ளார். தனது காலத்தில் பல தனியார் சமூக நிறுவனங்கள் ஊடாகவும், அரச சமூக நிறுவனங்கள் ஊடாகவும் பல சேவைகளைச் செய்து வந்த இவர் ஓய்வுக்காலம் வரையிலும் எழுத்துத் துறையில் ஈடுபட்டு வேடர் சமூகம் சார்ந்து பல ஆய்வுக் கட்டுரைகளையும், பனுவல் ஒன்றையும் கூட எழுதியுள்ளார். அத்துடன் தற்போதும் கூட பல சமூக விடயங்களையும், இலக்கியப் பங்களிப்புக்களையும் செய்து வருகின்றார்.