ஆளுமை:விஜயதீபா, இரத்தினம்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விஜயதீபா
தந்தை இரத்தினம்
தாய் செல்வமணி
பிறப்பு 1983.12.30
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர், கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

விஜயதீபா, இரத்தினம் யாழ்ப்பாணத்தில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை இரத்தினம்; தாய் செல்வமணி. பிரபா அன்பு என்னும் புனைபெயரிலேயே இவர் தனது ஆக்கங்களை எழுதி வருகிறார். தனது கல்வியை யா/ஸ்கந்தவரோதயாவில் கற்றார். சமூகசேவையாளர், ஓவியர், கைவேலை பொருட்கள் செய்தல், கவிதை, சிறுகதை, நாடகம் நடித்தல் என பன்முகங்களைக் கொண்டவர் விஜயதீபா. அத்தோடு போர்க்கால வடுக்களை தனது புகைப்படத்தின் ஊடாக தத்ரூபவமாக வெளிக்கொண்டு வருகிறார். பாடசாலைக்காலத்தில் விளையாட்டுத்துறையில் சம்பியன் பட்டங்களைப் பெற்றுள்ளார். இவரின் பேனா உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதைகளைப் புனைவதில் முனைகிறதென்கிறார். பலராலும் இன்று பேசப்படும் போர்கால வாழ்வியல் பதிவுகளை ஆவணப்படுத்தப்பட வேண்டிய பெரியதொரு வேலையை தனது பேனா முனையின் ஊடாக ஆவணப்படுத்தி வருகிறார் இந்த இளம் எழுத்தாளர். அதன் ஒரு பகுதியாக வானம்பாடி போர்க்கால வாழ்வியல் பதிவுகள் பகுதி 01 என்னும் நூலில் தோழமையின் தொடர்ச்சி என்ற தலைப்பில் இவர் எழுதிய நண்பியின் வீரவரலாறு இடம்பெற்றுள்ளது. தொடர்ந்தும் போர்க்காலத்தில் களமுனையில் நடந்தவை மற்றும் அதன்பின் நடைபெறும் சம்பவங்களை சிறுகதைகள் ஊடாக இணையத்தின் ஊடாக எழுதி வருகிறார். போர்ப்பறவைகள் என்னும் நூலையும் இவர் வெளியிட்டுள்ளார். இவரால் முள்ளிவாய்க்காலில் எடுக்கப்பட்ட புகைப்படம் துயரத்தின் கதையை எம் கண் முன் கொண்டுவருமளவுக்கு தத்துரூபமாக எடுக்கப்பட்டுள்ளது. இவரின் உயிரோட்டமான புகைப்படம் இணையங்களில் வெகுவாகப் பகிரப்பட்டு பேசப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.


குறிப்பு :மேற்படி பதிவு விஜயதீபா, இரத்தினம் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

படைப்புகள்

  • போர்ப்பறவைகள்