ஆளுமை:விக்கினேஸ்வரன், தங்கேஸ்வரன்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் விக்கினேஸ்வரன்
தந்தை தங்கேஸ்வரன்
தாய் விஜயலட்சுமி
பிறப்பு 1993.10.29
ஊர் களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை ஓவியக்கலைஞர்கள்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.



விக்கினேஸ்வரன், தங்கேஸ்வரன் (கி.பி - 1993.10.29) மட்டக்களப்பு, களுவன்கேணியைச் சேர்ந்த ஓவியக்கலைஞர்கள். இவரது தந்தை தங்கேஸ்வரன்; தாய் விஜயலட்சுமி. தனது ஆரம்பக்கல்வியினை மட்டக்களப்பு, களுவன்கேணி விவேகானந்தா வித்தியாலயத்தில் உயர்தரம் வரை கற்றுள்ளார். தனது முதலாவது பட்டப்படிப்பான நுண்கலைமானி பட்டத்தினை இராமநாதன் நுண்கலை பீடம், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஓவியத்துறையில் பெற்றுக்கொண்டார். இதுவரை பல ஓவியக் கண்காட்சிகளினை நடாத்தியுள்ளார். இவர் தனது ஓவியங்களில் கடல் சார்ந்த நடவடிக்கைகள், வேட மூதாதையர்கள், அவர்தம் வாழ்வியல் முறைகள் மற்றும் சடங்கார்ந்த நிகழ்வுகள் முதலானவற்றினைக் கருப்பொருளாகக் கொண்டுள்ளார். ஓவியத்துறையின் சகல பாணிகளிலும் மிகவும் கைத்தேர்ந்த இவர் கவிதை, சிறுகதை, கட்டுரை வரைதல் முதலான இலக்கிய ஈடுபாடும் கொண்டவர்.

இவர் தனது சமூகத்தின் ஆரம்ப கால பண்பாட்டசைவுகளை, நவீன வாழ்வியல் முறைகள், கல்வி அமைப்புக்கள் என்பவற்றில் இருந்து பிரித்தறியக்கூடிய தனது சமூக அரசியலையும் நன்குணர்ந்தவராவார். அத்துடன் தனது சமூகத்தில் இருந்து முதலாவதாக பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகியவராகக் காணப்படுகின்றார். இன்றைய காலத்தில் தனது இனத்தினை மீட்டெடுக்கக்கூடிய காலனீய நீக்கச் சிந்தனையும் கொண்டவர். தனது சமூகத்தின் பண்பாடு மற்றும் மானிடவியல் அசைவுகளின் தாக்கங்களினை தனது ஓவியம் மற்றும் இலக்கிய நடையின் ஊடாகப் பேசக்கூடியவராகவும், தனது முன்னோர்களின் கலை நடவடிக்கைகள், இயற்கையோடினைந்த வாழ்வியல் முறைகள் என்பவற்றை உள்ளிருந்து பிரயோகிக்கும் ஒரு நவீனத்தெளிவும், தன்மரபு மீதான மீட்புச் சிந்தனையும் கொண்ட செயற்பாட்டாளரும் ஆவார்.