ஆளுமை:வாசுகி, ஜெயசங்கர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வாசுகி ஜெயசங்கர்
தாய் கமலா வாசுகி
பிறப்பு 1966.11.29
இறப்பு -
ஊர் யாழ்ப்பாணம், இணுவில்
வகை ஓவியர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.
VashukiJeyasangar.jpg

சிறந்த பெண்ணிலை வாத ஓவியர் என உலகளாவிய ரீதியில் புகழ்பெற்ற தன்னார்வ செயற்பாட்டாளர் வாசுகி ஜெயசங்கர் ஆவர். கமலா வாசுகி என தனது தாயாரை முன்னிலைப்படுத்தி தன்னை வெளிப்படுத்தி கொள்ளும் இவர் யாழ்ப்பாணத்தில் பிறந்தார். யாழ் வேம்படி மகளிர் கல்லூரியில் தனது பாடசாலை கல்வியை பெற்றுக் கொண்ட இவர் சிறுவயதிலேயே ஓவியத்தில் ஆர்வம் கொண்டவர். இவரது ஓவியத்தின் மூலம் பெண்ணிலை வாத உலகிற்கு புரிய வைக்க முற்படும் பல ஓவியங்களை பல சஞ்சிகைகள், புத்தகங்கள் என்பவற்றின் அட்டைப்படங்கள், ஓவியக்கண்காட்சிகள் மூலம் புரிந்து கொள்ளலாம்.

UNICEF, Care, Action, சூர்யா பெண்கள் அபிவிருத்தி நிலையம் போன்றவற்றில் பணிபுரிந்ததோடு பல நிறுவணங்களில் சிரேஷ்ர ஆலோசகராகவும் கடமை புரிந்துள்ளார். கலைகளிலும் ஆர்வம உள்ள இவர் வீனை வாசிப்பதிலும் வல்லவர் நாடகங்கள் மூலம் உண்மை நிலையை உலகிற்கு உணர்த்தும் சிறந்த நாடக பேராசான் ஜெயசங்கர் அவர்களை துணையாக்கி கொண்டார். இருவரதும் பெண்ணிலைவாத பயணங்கள் பல.

இவர் எங்களது கதைகளும் எங்களது போராட்டங்களும், வடக்கினப் போருக்கு பின்னரான வாழ்வாதார பிரச்சிணைகள் பற்றிய ஆய்வு போன்ற புத்தகங்களை எழுதியதோடு பெண், பிரவாகினி, பெண்களின் குரல், பெண்களின் செய்திமடல் பெண்ணிலை, தாய்வீடு போன்ற சஞ்சிகளில் கட்டுரைகள் எழுதியதோடு தொகுப்பாசிரியராகவும் கடமையாற்றி உள்ளார். பங்களாதேஷ், தாய்வான் போன்ற நாடுகளிலும் இவர் தனது சேவையை வழங்கியுள்ளார்.

இவரது தன்னார்வ செயற்பாடுகளாக பெண்ணிலைவாத கலந்துரையாடல்களை நிகழ்த்த தூண்டுதல், ஓவியங்கள் ஊடாக பெண்ணிவாத செயற்பாடுகளை வெளிகொண்டு வருதல், பெண்களுகெதிரான வன்முறைகளின் போது குரல் கொடுத்தல், பெண்களுக்ககான அபிவிருத்தி, பாதுகாப்பு, பொருளாதாரம் போன்றவற்றிற்கான வழிப்படுத்தல், கலந்துரையாடல்களை மேற்கொள்ளல், ஓவிய கண்காட்சிகளை நிகழ்த்துதல், பெண்களுக்கெதிரான வன்முறைகளை, சமகால நிகழ்வுகளை பற்றிய வெளிப்படுத்தல்களை எழுதுதல் மற்றும் எழுத தூண்டுதல், ஆய்வுகளை மேற்கொள்ள வழிகாட்டலும், தொகுத்தலும் போன்றைவற்றைக் குறிப்பிடலாம்.