ஆளுமை:வனிதா, வரதராஜா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வனிதா
தந்தை வரதராஜா
தாய் சிவமலர்
பிறப்பு 1976.10.26
ஊர் யாழ்ப்பாணம்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வனிதா, வரதராஜா (1976.10.26) யாழ்ப்பாணம், மானிப்பாயில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை வரதராஜா; தாய் சிவமலர். ஆரம்பக் கல்வியை உடுவில் மகளிர் கல்லூரியிலும், இடைநிலை, உயர்தரக் கல்வியை மானிப்பாய் மகளிர் கல்லூரியிலும் கற்றார். கொழும்பு நூலகச் சங்கத்தில் நூலக தகவல் விஞ்ஞான டிப்ளோமாவை முடித்து தற்பொழுது வவுனியா பொது நூலகத்தில் நூலகராகக் கடமையாற்றி வருகிறார். அறிவிப்புத்துறையில் ஆர்வமுள்ள இவர் இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், வன்னிச் சேவை ஆகியவற்றில் அறிவிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார். பாடசாலை சமூகத்திற்கு மத்தியில் குறிப்பாக வாசிப்புப் பழக்கம் மாணவர்கள் மத்தியில் குறைந்து செல்வதைத் தடுக்கும் வகையிலும் அவர்களின் வாசிப்புப் பழக்கத்தை மேம்படுத்தும் நோக்கிலும் பாடசாலைகளுக்குச் சென்று வாசிப்பு பழக்கம் தொடர்பில் உரையாற்றி வருகிறார். வவுனியா பொது நூலகத்தினால் ஆண்டுதோறும் வெளியிடப்படும் தேசிய வாசிப்பு மாத சிறப்பிதழின் மலர் ஆசிரியராகவும் இருந்து வருவதோடு இம் மலரில் வாசிப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கட்டுரைகளையும் இவர் எழுதி வருகின்றார்.

குறிப்பு : மேற்படி பதிவு வனிதா, வரதராஜா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வனிதா,_வரதராஜா&oldid=299162" இருந்து மீள்விக்கப்பட்டது