ஆளுமை:வசந்தி, ஜெயராஜ்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் வசந்தி
பிறப்பு
ஊர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

வசந்தி. ஜெயராஜ் ஜெயா தமிழினி எனும் புனைபெயரில் எல்லாராலும் அறியப்படுபவர். பாடசாலைக் காலத்திலேயே எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார் எழுத்தாளர். கவிதை கட்டுரை ஆய்வுக்கட்டுரைகளை எழுதி வரும் எழுத்தாளரின் எழுத்துக்கள் பெண்ணியம் சார்ந்த கருத்துக்களை வலியுறுத்துவதாக உள்ளது.


தேசிய விநாயகம்பிள்ளை எழுதிய ஆசியஜோதி நூல் தொடர்பான ஆய்வுக்கட்டுரையே இவர் எழுதிய முதல் ஆய்வுக்கட்டுரையாகும். இவரின் எழுத்துலக பிரவேசத்திற்கு முதலில் களம் அமைத்துக்கொடுத்தது தினகரன் பத்திரிகை என்பதை நன்றியுடன் நினைவுகூருகிறார்.

வழிதேடும் விழிகள், நிகழ்கால பூக்கள், உள்ளுராட்சி மன்றங்களின் ஆற்றல்கள் மேம்படுத்தும் வழிமுறைகள் என்பன இவரின் நூல்களாகும்.

பல விருதுகளையும் நூற்றுக்கணக்கான வெற்றிச்சான்றிழ்களையும் இவர் பெற்றள்ளார்.

விருதுகள்

கலைமாமணி, சமூகதீபம், தேசமானி, ஆக்க இலக்கிய வித்தகர்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:வசந்தி,_ஜெயராஜ்&oldid=337876" இருந்து மீள்விக்கப்பட்டது