ஆளுமை:லோகநாதன், புஷ்பலதா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் புஷ்பலதா
தந்தை நாகலிங்கம்
தாய் நல்லம்மா
பிறப்பு
ஊர் அம்பாறை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

லோகநாதன், புஷ்பலதா அம்பாறை மாவட்டம் பாண்டவர் குடியிருப்பின் பாண்டிருப்பில் பிறந்த எழுத்தாளர், இவரது தந்தை நாகலிங்கம்; தாய் நல்லம்மா. ஆரம்பக் கல்வியை கல்முனை கார்மேல் பற்றிமா தேசிய பாடசாலையிலும், மட்டக்களப்பு வின்சன்ட் மகளிர் கல்லூரியிலும் , கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலையிலும் கற்றுள்ளார். தொழிற்கல்வியை யாழ்ப்பாண மருத்துவ பீடத்தில் பயின்று கல்முனை ஆதார வைத்தியசாலையிலும் தற்போது சேனைக்குடியிருப்பு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு நிலையத்தில் பொறுப்பு வைத்தியராகவுள்ளார். கல்முனை ரோட்டரிக் கழகத்தில் ஆரம்ப கால செயலாளராகவும், 2004-2005, 2005-2006ஆம் ஆண்டு காலப் பகுதியில் ரோட்டரிக் கழகத்தின் தலைவியாகவும் சுனாமி வேலைத் திட்டங்களான வாழ்வாதார உதவிகள், மீன்பிடி வள்ளங்கள் வழங்கியமை, பாடசாலை கட்டட மீள் நிர்மாணம், வைத்தியசாலையில் உபகரணங்கள் வழங்கியமை போன்ற சமூக பணியிலும் ஈடுபட்டிருந்தார் எழுத்தாளர் புஷ்பலதா. கார்மேல் தேசிய பாடசாலையின் 30 வருட காலமாக உறுப்பினராகவும், எட்டு வருடங்கள் தொடர்ச்சியாக செயலாளராகவும் இருந்துள்ளார். பாண்டிருப்பு மறுமமலர்ச்சி சனசமூக நிலையத்தின் உறுப்பினராகவும், கல்முனை கலை இலக்கிய நண்பர்களின் உபதலைவியாகவும் இருக்கிறார். போர், சுனாமி, வறுமை போன்றவற்றினிடையான பொதுமக்கள் மீள் கட்டுமானத்தில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டு செயற்பட்டவராவார். 2007ஆம் ஆண்டு ”புதிய இலைகளால் ஆதல்” எனும் கவிதைத் தொகுப்பின் மூலம் இலக்கிய உலகில் பரிச்சயமானவர் எழுத்தாளர் டொக்டர் புஷ்பலதா லோகநாதன். மூன்றாவது மனிதன், சரிநிகர், உயிர் எழுத்து(வீரகேசரி) ஊடறு (இணைய இதழ்), பிரவாசம் (காட்சி இலத்திரனியல் இதழ்), மை (பெண் கவிதைகளின் தொகுதி), கிழக்கிலங்கையின் பெண் படைப்பாளிகளின் கவிதைத் தொகுப்பு என்பனவற்றில் இவரின் படைப்புக்கள் வெளிவந்துள்ளன.

குறிப்பு : மேற்படி பதிவு லோகநாதன், புஷ்பலதா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது

படைப்புகள்

  • புதிய இலைகளா் ஆதல் (கவிதைத் தொகுப்பு)

வளங்கள்

  • நூலக எண்: 14563 பக்கங்கள் 44-46