ஆளுமை:லட்சுமி, நிலமையர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் லட்சுமி
தந்தை நிலமையர்
தாய் சின்னப்பிள்ளை
பிறப்பு 1943.04.14
இறப்பு -
ஊர் அக்கரை,களுவன்கேணி, மட்டக்களப்பு
வகை மருத்துவிச்சி
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.


நிலமையர் லட்சுமி (1943.04.14) அக்கரை, களுவன்கேணி மட்டக்களப்பைச் சேர்ந்த மருத்துவிச்சி மற்றும் வேட மதகுரு ஆவார். இவரது தந்தை நிலமையர்;தாய் சின்னப்பிள்ளை. இவரது கணவர் வேலாயுதம். இவருக்கு நான்கு பிள்ளைகள் உள்ளனர். இவர் தரம் ஒன்று வரை களுவன்கேணி மெதடிஸ்த மிஷன் தமிழ்க்கலவன் பாடசாலையில் கல்வி கற்றுள்ளார். இன்று வரை இவர் தமது வேடமரபினையும், சடங்காசாரங்களினை அடுத்த தலைமுறைக்குக் கடத்தும் வேட மதகுருவாகவும், இயற்கை முறையில் அமைந்த கிராமத்து மருத்திவிச்சியாகவும் காணப்படுகின்றார்.சுமார் நாற்பது வருடங்களுக்கு மேலாக இவர் மருத்துவிச்சியாக சேவையாற்றி உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. தனது சேவைக்காலத்தில் சுமார் 1000 மேற்பட்ட குழந்தைகளை எதுவித பாதிப்பும் இல்லாமல் பிரசவிக்க வைத்துள்ளார். இவரது சேவைத்திறத்தினைப் பாராட்டி மட்டகளப்பு போதனா வைத்தியசாலையும் இவருக்கு விருதுகள், பிரசவ உபகரணங்கள் என்பவற்றை சிறிது காலத்திற்கு முன்னர் வழங்கியுள்ளது. தற்பொழுது இவரின் வயது முதிர்வு காரணமாக இவரை மருத்துவம் செய்ய அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. தனது கிராமத்தில் உள்ள வேடர் வழிபாட்டு இடம் மற்றும் வேடர் மரபினை அவர் தம் பண்பாட்டின் அடியாகப் பாதுகாத்த பெண்களின் பட்டியலின் இன்று உதாரணமாக இவர் மட்டுமே திகழ்கின்றார்.