ஆளுமை:றொபேட் நிக்சன், நசரேணு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றொபேட் நிக்சன்
தந்தை நசரேணு
தாய் -
பிறப்பு 1973.03.17
ஊர் கிளிநொச்சி
வகை நாடகக்கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றொபேட் நிக்சன், நசரேணு (1973.03.17 -) கிளிநொச்சி, கோரக்கன் கட்டில் வசித்து வரும் நாடகக்கலைஞர். இவர் ஆரம்பக்கல்வியை கிளி/புனித அந்தோனியார் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும், உயர்கல்வியை கிளி/ முருகானந்தாக் கல்லூரியிலும் கற்றார்.

2010 ஆம் ஆண்டு முதல் கோரக்கன்கட்டு புத்தொளி கலாமன்ற தலைவராகவும், வீதி நாடகங்களையும், சமூக நாடகங்களையும், வரலாற்று நாடகங்களையும் நடித்து வழங்கி வருகிறார். 1998-2008 வரையான காலபகுதியில் நூற்றிற்கு மேற்பட்ட தெருவெளியரங்கு ஆற்றுகைகளில் ஈடுபட்டுள்ளார். மேலும் இவரைப் பற்றிய செய்திகள் 'முக்கியஸ்தர் முகவரி' எனும் நூலில் குறிப்பிடப்பட்டுள்ளது.


வளங்கள்

  • நூலக எண்: 82754 பக்கங்கள் 44-46