ஆளுமை:றினோஸா, நௌசாத்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றினோஸா நௌசாத்
பிறப்பு
ஊர் நாச்சியாதீவு
வகை எழுத்தாளர்,ஊடகவியலாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றினோஸா, நௌசாத் நாச்சியாதீவில் பிறந்த பெண் ஆளுமை. பாடசாலைக் கல்வியை நாச்சியாதீவு முஸ்லிம் மகாவித்தியாலத்தில் உயர்தரம் வரை கல்வி கற்றார். இலங்கைத் தொலைக்காட்சிப் பயிற்சிக் கல்லூரியில் தனது டிப்ளோமாகப் பாடநெறியைப் பூர்த்திசெய்துள்ளார்.

உயர்தரத்தில் எழுத்துத்துறைக்குள் பிரவேசித்துள்ளார். கவிதை, சிறுகதை, நாவல் எழுதுவதென பன்முகத் திறமைகளகை் கொண்ட இவரின் ஆக்கங்கள் பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. டான் தொலைக்காட்சியின் ஊடாக ஊடகத்துறைக்குள் காலடி எடுத்துவைத்த இவர் கவியரங்கம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுள்ளார். இவரது ஆக்கங்கங்கள் தினகரன் நவமணி, அவள் விகடன், உயிர்மெய், நிஜம் போன்ற பத்திரிகளிலும் சஞ்சிகைளிலும் வெளிவந்தவண்ணமுள்ளன. இலங்கையின் முதல் இஸ்லாமியத் தொலைக்காட்சியான செரண்டிப் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித்தயாரிப்பாளராகக் கடமை புரிந்துள்ளார். தற்போது UTV இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் தொகுப்பாளராகவும் கடமையாற்றி வருகின்றார். 2014 இல் இந்தியாவில் கோவையில் இடம்பெற்ற தாயகம் கடந்த தமிழ் சர்வதேச மாநாட்டில் பங்குபற்றியுள்ளார். .

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:றினோஸா,_நௌசாத்&oldid=408754" இருந்து மீள்விக்கப்பட்டது