ஆளுமை:றஸ்மியா, மொஹமட் சஹீத்'

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் றஸ்மியா
தந்தை மொஹமட் சஹீத்
தாய் மசாஹிரா
பிறப்பு
ஊர் வரிபத்தாச்சேனை
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

றஸ்மியா, மொஹமட் சஹீத் அம்பாறை வரிப்பத்தாச்சேனையில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை மொஹமட் சஹீட்; தாய் மசாஹிரா. ஆரம்பக் கல்வியை இறக்காமம் வரிப்பத்தாஞ்சேனை அல் அமீன் பாடசாலையிலும் உயர்தரத்தை இறக்காமம் அல் அஷ்ரப் வித்தியாலயத்திலும் கற்றார். முன்பள்ளி ஆசிரியர் டிப்ளோமாவை முடித்துள்ள றஸ்மியா முன்பள்ளி ஆசிரியராகக் கடமையாற்றி வருகிறார்.

பாடசாலைக் காலங்களில் இருந்தே எழுத்துத்றையில் பிரவேசித்துள்ளார். பாடல், கவிதை, சிறுகதை, சிறுவர் பாடல், சிறுகதை எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக்கூட்டுத்தாபனம், பிறை எப்எம், சூரியன் எப்எம், ஊவா சமூக வானொலி, வசந்தம் எப்எம் தூவானம் நிகழ்ச்சிகளிலும் இவரின் ஆக்கங்கள் வெளிவந்துள்ளன. மண்வாசம், கீறல் ஆகிய சஞ்சிகைகளிலும் தினகரன் நாளிதழிலும் இவரின் ஆக்கம் வெளிவந்துள்ளன. ஆயிரம் கவிதை நூலிலும் இவரின் கவிதை வெளியாகியுள்ளது. பொருளாதாரச் சூழல் காரணமாக நூல் வடிவில் இவரின் ஆக்கங்கள் இதுவரை வெளியாகவில்லை எனத் தெரிவிக்கும் எழுத்தாளர் இவரின் ஆக்கங்களை மிக விரைவில் நூலுருவில் கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவிக்கின்றார்.

விருதுகள்

கலைத்தீபம் விருது – மலையக கலைகலாசார சங்கம்.

மேம்பாட்டாளர் விருது – அம்பாறை தமிழ் எழுத்தாளர் மேம்பாட்டாளர்.

குறிப்பு : மேற்படி பதிவு றஸ்மியா, மொஹமட் சஹீத் அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.