ஆளுமை:ரிஸானா, முகம்மது ஹனிபா

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் ரிஸானா
தந்தை ஹனிபா
தாய் ஹைருன்நிஸா
பிறப்பு
ஊர் ஏறாவூர்
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

ரிஸானா, முகம்மது ஹனிபா அம்பாறை மாவட்டம் ஏறாவூரில் பிறந்த எழுத்தாளர். இவரது தந்தை ஹனிபா; தாய் ஹைருன்நிஸா. தந்தையின் பெயரையும் தன் பெயரையும் இணைத்து ரீஸா ஹனி எனும் பெயரில் எழுதி வருகிறார். ஆரம்பக் கல்வியினை மட்டக்களப்பு ஏறாவூர் றஹமானியா மகாவித்தியாலயத்தில் பயின்றார்.

பாடசாலைக் காலங்களில் தமிழ்த்தினப் போட்டிகளின் பங்குபற்றியதன் ஊடாகவும் கலை விழாக்கள் ஊடாகவும் இலக்கிய உலகிற்குள் காலடி எடுத்து வைத்துள்ளார். ஆரம்பத்தில் இவரின் ஆக்கங்கள் வானொலியில் கவிதைகளை எழுதி வந்த எழுத்தாளர். தற்பொழுது முகநூலில் எழுதி வருகிறார். கவிதை, கதை, பாடல்கள் எழுதுவதென பன்முகத் திறமைகளைக் கொண்டவர். வெகு விரைவில் ஒப்பனை அறியாச் சொற்கள் எனும் கவிதைத் தொகுதியொன்றை ரிஸானா வெளியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

குறிப்பு : மேற்படி பதிவு ரிஸானா, முகம்மது ஹனிபா அவர்களின் தகவலை அடிப்படையாகக்கொண்டது.