ஆளுமை:மேரி நிரூபா, பாவிலு

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மேரி நிரூபா
தந்தை அந்தோனி பாவிலு
தாய் கிறிஸ்ரி மேரி
பிறப்பு
ஊர் உயிலங்குளம்
வகை கலைஞர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மேரி நிரூபா, பாவிலு மன்னார் மாவட்டம் புதுக்கமம் உயிலங்குளத்தில் பிறந்த ஓவியர். இவரது தந்தை அந்தோனி பாவிலு; தாய் கிறிஸ்ரி மேரி. ஆரம்பக்கல்வியை மன்னார் நாவற்குளம் றோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை மன்னார் நானாட்டான் மத்திய வித்தியாலயத்திலும் உயர் கல்வியை வவுனியா இறம்பைக்குளம் மகளீர் மகாவித்தியாலயத்திலும் கற்றார். மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி நுண்கலைத்துறையில் கட்புலமும் தொழிநுட்பவியலும் சிறப்பு படிப்பை முடித்து நுண்கலைமாணிப் பட்டம் பெற்றார். தற்பொழுது ஓவியத்துறையில் மிளிர்ந்த வண்ணம் உள்ளார்.

தனது மூன்று வயதில் இருந்து ஓவியத்துறையில் மிகவும் ஆர்வம் இருந்ததாகத் தெரிவிக்கும் ஓவியர் மேரி நிரூபா தனது பட்டப்படிப்பின் இறுதியாண்டு ஆய்வுக்காக மட்டக்களப்பு கிழக்கு பல்கலைக்கழகத்தில் நுண்கலைப்பீட ஓவியக் கூடத்தில் மன்னார் பறப்பான் கண்டல் பெரிய கோயிலில் உள்ள வியாகூல மாதா பிரசங்கத்திற்குரிய ஓவியங்களை காண்பியக்கலை காட்சியாக காட்சிப்படுத்தியதன் மூலம் மன்னார் மாவட்டத்தின் தொன்மை பலருக்கு தெரியவந்ததும் பலரதும் பாராட்டினையும் பெற்றதாகத் தெரிவிக்கின்றார்.

சுமார் ஆயிரம் ஓவியங்களை வரைந்துள்ளார். எண்ணெய் வர்ண ஓவியங்கள், நீர் வர்ண ஓவியங்கள், பஸ்ரல்வர்ண ஓவியங்கள், பென்சில் ஓவியங்கள், பேனா ஓவியங்கள் என்பனவற்றில் ஈடுபட்டு வரும் ஓவியர் பல தடவைகள் ஓவியக் கண்காட்சியினை வைத்துள்ளார்.

கவிதை, பாடல், நாடகம், கைவினை, திறனாய்வு, விளையாட்டு என பன்முகத்திறமைகளைக் கொண்டவர்.

விருதுகள்

வடமாகாண கலைமன்றங்களுக்கிடையிலான கலை ஆக்கத்திறன் போட்டியில் ஓவியத்திற்கு இரண்டாம் இடம்.

தேசிய சமாதான பேரவையின் புராதான மன்னாரை வெளிக்கொணர்வோம் புகைப்பட கண்காட்சியில் பாராட்டும் சான்றிதழும்.

வெளி இணைப்புக்கள்