ஆளுமை:முஹம்மது இப்றாகிம், இஸ்மாலெவ்வை
பெயர் | முஹம்மது இப்றாகிம் |
தந்தை | இஸ்மாலெவ்வை |
தாய் | அலிமானாச்சி |
பிறப்பு | 1946.03.05 |
ஊர் | சம்மாந்துறை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முஹம்மதது இப்றாகிம், இஸ்மாலெவ்வை (1946.03.05-) சம்மாந்துறையை சேர்ந்த ஒரு எழுத்தாளர் ஆவார். இவர் ஆதம்கண்டு இஸ்மாலெவ்வை முஹம்மது தம்பி அலிமானாச்சி தம்பதிகளின் மூத்த புதல்வனாவார்.இவருடன் சேர்த்து இவரது உடன்பிறப்புக்கள் மொத்தம் ஆறுபேராவர். 1951ஆம் ஆண்டு சம்மாந்துறை ஆண்கள் பாடசாலையில் தனது ஆரம்பக்கல்வியினை ஆரம்பிக்கிறார். 1961ஆம் ஆண்டு தனது உயர்கல்வியை தொடர்வதற்காக கல்முனை சாஹிரா கல்லூரியில் இணைகிறார், அதனைத்தொடர்ந்து அதே பாடசாலையில் 1968ஆம் ஆண்டு மாணவ ஆசிரியராக நியமனம் பெற்று சேவையாற்றி வந்துள்ளார்.
பின்னர் 1971ஆம் ஆண்டு பலாலி ஆசிரியர் பயிற்சி கலாசாலையில் வர்த்தகத்துறையில் பயிற்றப்பட்டவராக 1972ஆம் ஆண்டு சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகாவித்தியாலயத்தில் ஆசிரியராக நியமனம் பெற்று சேவையாற்றி வந்தார். 1974 வெளிவாரியாக உயர்தரப்பரீட்சைக்கு தோற்றி வர்த்தக துறைக்கான பல்கலைக்கழகம் நுழைந்தார். 1978 ஆம் ஆண்டு அபிவிருத்தி முகாமைக்கற்கைநெறி விஷேட பட்டம் பெற்றார்.
கல்முனை கரையோர மாவட்டம் எனும் நூலினை எழுதியுள்ளார் மற்றும் ஈழத்தின் இன்னுமொரு மூலை எனும் நூலின் பிரதான ஆசிரியராகவும் செயற்பட்டுள்ளார்.