ஆளுமை:முருகவேல், கந்தசாமி

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகவேல்
தந்தை கந்தசாமி
தாய் மங்கையர்க்கரசி
பிறப்பு 1957.02.23
ஊர் யாழ்ப்பாணம், அச்சுவேலி
வகை ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகவேல், கந்தசாமி (1957.02.23 - ) யாழ்ப்பாணம், அச்சுவேலியை பிறப்பிடமாகக் கொண்ட ஓய்வுநிலை கல்விப் பணிப்பாளர். இவரது தந்தை கந்தசாமி; தாய் மங்கையர்க்கரசி. கிளிநொச்சி, வட்டக்கச்சியில் வசித்து வரும் இவர் தன்னுடைய ஆரம்பக்கல்வியை இடைக்காடு மகா வித்தியாலயத்திலும், உயர்தர கல்வியினை உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரியிலும் கற்றார். பின்னர் பல்கலைக்கழக அனுமதி கிடைக்கப்பெற்று யாழ்பாண பல்கலைகழகத்தில் பௌதிகவியல் விஞ்ஞான மானிப் பட்டமும், கல்வியியல் டிப்ளோமா மற்றும் முதுமாணி பட்டமும் பெற்றார்.

இவர் புசல்லாவ சரஸ்வதி வித்தியாலயம் மற்றும் புனித தெரசா பெண்கள் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றியுள்ளார். பின்னர் வட்டக்கச்சி மத்திய கல்லூரியில் பிரதி அதிபராகவும், இராமநாதபுரம் மகா வித்தியாலயத்தில் அதிபராகவும் கடமையாற்றினார். கணித பாடத்திற்கான ஆசிரிய ஆலோசகராகவும் பணிபுரிந்துள்ளார். கணித பாட உதவிக்கல்விப் பணிப்பாளரகவும் சேவையாற்றியுள்ளார். அதன் பின் பிரதிக்கல்விப்பணிப்பளராக கடைமையாற்றியுள்ளார். இவர் நோயாளர் நலன்புரி சங்கம், கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை போசகராகவும் பணியாற்றியுள்ளார்.

2011 ஆம் ஆண்டில் சிறந்த அதிபருக்கான விருதை அப்போதைய கல்வி அமைச்சர் பந்துல குணவர்த்தன அவர்களின் கையால் பெற்றுக்கொண்டார்.