ஆளுமை:முருகபூபதி, லெட்சுமணன்

நூலகம் இல் இருந்து
(ஆளுமை:முருகபூபதி, லெ. இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் முருகபூபதி
தந்தை லெட்சுமணன்
பிறப்பு 1951.07.13
ஊர் நீர்கொழும்பு
வகை எழுத்தாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

முருகபூபதி, லெட்சுமணன் (1951.07.13 - ) நீர்கொழும்பைச் சேர்ந்த எழுத்தாளர், பத்திரிகையாளர். இவரது தந்தை லெட்சுமணன். இவர் தற்போதைய விஜயரத்தினம் இந்து மத்திய கல்லூரி 1954 இல் விவேகானந்த வித்தியாலயம் என்னும் பெயரில் தொடங்கிய போது அதன் முதலாவது மாணவராகச் சேர்ந்தார். பின்னர் யாழ்ப்பாணம் ஸ்ரான்லிக் கல்லூரியிலும் நீர்கொழும்பு அல்கிலால் மகா வித்தியாலயத்திலும் கல்வி கற்றார். இவர் 1972 இல் 'கனவுகள் ஆயிரம்' என்ற சிறுகதை மூலமாக மல்லிகை இதழில் அறிமுகமானார். இவரது முதலாவது சிறுகதைத் தொகுதியான சுமையின் பங்காளிகள் 1954 இல் வெளியானது. இந்நூலுக்கு இலங்கை சாகித்திய மண்டல விருது கிடைத்தது.

1977 இல் வீரகேசரிப் பத்திரிகையில் பணிபுரியத் தொடங்கிய இவர், 1985 இல் அதன் ஆசிரியர் குழுவில் இருந்த போது சோவியத் ஒன்றியத்தின் அழைப்பில் உலக இளைஞர் - மாணவர் விழாவில் கலந்து கொண்டார். இவர் நீர்கொழும்பு இலக்கிய வட்டத்தின் செயலாளராகவும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் தேசியசபை உறுப்பினராகவும் கொழும்புக் கிளையின் செயலாளராகவும் பணியாற்றி 1987 இல் அவுஸ்திரேலியாவுக்குப் புலம்பெயர்ந்து சிறுகதை, கட்டுரை, பேட்டி, பயண இலக்கியம் என்பவற்றை எழுதி வெளியிட்டு வருகின்றார்.

இவர் சுமையின் பங்காளிகள், சமாந்தரங்கள், சமதர்ம பூங்காவில், நெஞ்சில் நிலைத்த நெஞ்சங்கள், வெளிச்சம், எங்கள் தேசம், பறவைகள், பாட்டி சொன்ன கதைகள், இலக்கிய மடல், சந்திப்பு, இலங்கையில் பாரதி, கடிதங்கள், மல்லிகை ஜீவா நினைவுகள், ராஜ ஸ்ரீகாந்தன் நினைவுகள் போன்ற நூல்களை எழுதியுள்ளார்.


இவற்றையும் பார்க்கவும்

வெளி இணைப்புக்கள்

வளங்கள்

  • நூலக எண்: 4428 பக்கங்கள் 482-483
  • நூலக எண்: 19343 பக்கங்கள் 95-51
  • நூலக எண்: 4293 பக்கங்கள் 94-96
  • நூலக எண்: 2038 பக்கங்கள் 24-29
  • நூலக எண்: 2044 பக்கங்கள் 30-37
  • நூலக எண்: 9401 பக்கங்கள் 03-06