ஆளுமை:முகம்மது சமீம், அகமதுபுள்ள
நூலகம் இல் இருந்து
பெயர் | முகம்மது சமீம் |
தந்தை | அகமதுபுள்ள |
தாய் | நாச்சியா உம்மா |
பிறப்பு | |
ஊர் | பதுளை |
வகை | எழுத்தாளர் |
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம். |
---|
முகம்மது சமீம், அகமதுபுள்ள பதுளையைச் சேர்ந்த ஒரு எழுத்தாளர், ஆசிரியர் (சாஹிராக் கல்லூரி). இவரது தந்தை அகமதுபுள்ளை; தாய் நாச்சியா உம்மா. லண்டன் மெட்ரிகுலேசன் பரீட்சையில் சித்தி அடைந்த இவர், 1951 இல் கொழும்பு சாஹிராக் கல்லூரியில் படித்து, 1953 இல் பேராதனைப் பல்கலைக்கழகத்திற்குத் தெரிவாகி வரலாற்றுத் துறையில் B.A. சிறப்புப் பட்டம் பெற்றுள்ளார்.
இவரது நூல்களான விமர்சனக் கட்டுரைகள் பன்முக ஆய்வுக் கட்டுரைகளைக் கொண்டதாகவும் படைப்பாளிகளும் ஆய்வாளர்களும் என்ற நூல் இலங்கைக் கவிஞர்களையும் சிறுகதை ஆசிரியர்களையும் ஆய்வாளர்களையும் பற்றிய கட்டுரைகளைக் கொண்டதாகும். மேலும் இவரது சிறுபான்மை சமூகத்தின் பிரச்சனைகள் என்ற நூலுக்குச் சாஹித்திய மண்டலப் பரிசு கிடைத்துள்ளது. இவரது ஆக்கங்கள் தினகரன் பத்திரிகையிலும் ஞானம் சஞ்சிகையிலும் வெளிவந்துள்ளன.
இவற்றையும் பார்க்கவும்
வளங்கள்
- நூலக எண்: 398 பக்கங்கள் 05-09