ஆளுமை:மீரா, வில்வராயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீரா
பிறப்பு
ஊர் கொழும்பு
வகை கல்வியாளர்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

மீரா, வில்வராயர் கொழும்பில் பிறந்த கல்வியாளர். வெள்ளவத்தை இந்து மகளிர் கல்லூரி, மருதனார் மடம் இராமநாதன் மகளிர் கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார். சென்னை ராணி மேரி கல்லூரியில் 1984ஆம் ஆண்டு இசைத்துறையில் பட்டதாரிப் படிப்பை முடித்துக் கொண்டு யாழ் இராமநாதன் இசைக் கல்லூரியில் சங்கீத போதனாசிரியராகக் கடமை புரிந்தார்.


தேசிய கல்வி நிறுவனத்தில் உதவிச் செயற்றிட்ட அதிகாரியாகப் பணியாற்றியுள்ளனார். இங்கு கடமையாற்றிய காலப் பகுதியில் 1991ஆம் ஆண்டு இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட புலமைப்பரிசில் பெற்று திருவனந்தபுரத்திலுள்ள கேரளா பல்கலைக்கழகத்தில் கற்று கர்நாடக இசைத்துறையில் முதுமாணிப் பட்டம் பெற்றார். தேசிய கல்வி நிறுவனத்தின் பட்டப் பின் கல்வி டிப்ளோமாச் சான்றிதழையும் பெற்றுள்ளார். ”நம்மைப்பற்றிய கவிதை” எனும் நூலை வெளியிட்டுள்ளார்.

படைப்புகள்

"https://noolaham.org/wiki/index.php?title=ஆளுமை:மீரா,_வில்வராயர்&oldid=327256" இருந்து மீள்விக்கப்பட்டது