ஆளுமை:மீனாட்சி சுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயர்

நூலகம் இல் இருந்து
தாவிச் செல்ல:வழிசெலுத்தல், தேடுக
பெயர் மீனாட்சி சுந்தரக் குருக்கள்
தந்தை மார்க்கண்டேயர்
தாய் செல்வநாயகி
பிறப்பு
ஊர் புங்குடுதீவு
வகை சமயப் பெரியார்
இந்த பக்கத்தில் ஏதேனும் திருத்தங்கள் செய்யப்பட வேண்டுமாயின் அல்லது மேலதிக விபரங்கள் இணைக்கப்பட வேண்டுமாயின் noolahamfoundation@gmail.com என்ற மின்னஞ்சலுக்கு எழுதலாம்.

சிவஶ்ரீ மீனாட்சி சுந்தரக் குருக்கள், மார்க்கண்டேயர் புங்குடுதீவைச் சேர்ந்த சமயப் பெரியார். இவரது தந்தை மார்க்கண்டேயர்; தாய் செல்வநாயகி. இவரும் இவரது மனைவி பரமேஸ்வரி அம்மாவும் புங்குடுதீவு சிவன் கோவில் வளர்ச்சிக்குப் பெரிதும் உழைத்தனர்.

இருவரும் இவ் ஆலயத்தில் 1977 ஆம் ஆண்டு முப்பத்து மூன்று உத்தமோத்தம குடமுழுக்கு நடைபெற்ற போதும் 1982 ஆம் ஆண்டு பங்குனித் திங்களில் சிவன் பஞ்சதள இராசகோபுர குடமுழுக்கு நடைபெற்ற போதும் அர்ப்பணிப்புடன் கோயிற்கருமம் ஆற்றினர். இவர்கள் பிராமணப் பிள்ளைகளுக்காகச் சிவன்கோயில் குருபூசை மடத்தில் வேதாகம சாஸ்திரப் பாடசாலையை நிறுவியிருந்தனர். இப்பாடசாலையே ஈழத்தில் முதன்முதலாகத் தோன்றிய வேதாகமப்பாடசாலை என்ற பெருமைக்குரியது.

வளங்கள்

  • நூலக எண்: 11649 பக்கங்கள் 131